- Home
- Tamil Nadu News
- அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து கட்சியை அபகரித்துவிட்டதாக அன்புமணி மீது குற்றம் சாட்டி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாமக யாருக்கு..?
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் தற்போது தேர்தல் ஆணையத்தின் கிரீன் சிக்னலால் கட்சி மற்றும் சின்னம் அன்புமணி வசம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்களிடம் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தான் பாமக தலைவர் என தேர்தல் ஆணையம் ராமதாஸ்க்கு கடிதம் எழுதியது. இதனிடையே கட்சியை உரிமை கொண்டாடும் முனைப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு முறையிட்டது.
கட்சியின் தலைவர் அன்புமணி..?
விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் அன்புமணி தான் கட்சியின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது ஒருதலை பட்சமானது. நாங்கள் தான் உண்மையான பாமக என்று ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. மேலும் தங்களிடம் தான் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மேலும் பொதுக்குழுவில் தலைவரின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி அன்புமணி தான் கட்சியின் தலைவர் என்று கோரப்பட்டது.
முடிவுக்கு வராத மோதல்
தங்களிடம் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தான் கட்சியின் தலைவர். மேலும் ராமதாஸ் தரப்பிடம் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை தாக்கல் செய்தால் பரிசீலிக்க தயாராக இருக்கிறோம். பாமக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் இதில் தேர்தல் ஆணையம் பெரிய அளவில் தலையிடம முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இததை் தொடர்ந்து உரிமையியல் நீதிமன்றத்தை நாட உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சிபிஐக்கு செல்லும் ராமதாஸ் தரப்பு
இந்நிலையில் பொய்யான ஆவணங்களை வழங்கி கட்சியை அபகரித்துவிட்டதாக அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் டெல்லி காவல்துறை துணை ஆணையரை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாசுக்கு எதிராக கிரிமினல் குற்றப் புகாரை பதிவு மருத்துவர் ராமதாஸ் பதிவு செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. பாமக பொதுக்குழு குறித்த போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்ததாக கூறி அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட உள்ளது
மருத்துவர் ராமதாஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி கிரிமினல் புகாரை பதிவு செய்கிறார். சிபிஐ இயக்குனரிடம் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில் நேரம் கொடுக்கப்பட்டவுடன் சிபிஐ விசாரணை கேட்டு புகார் மனு வழங்கப்பட உள்ளது.

