- Home
- Politics
- விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
விஜய் திருப்பரங்குன்ற விஷயத்தில் குரல் எழுப்புவதால் இந்த பிரச்சனை தீர்ந்து விடுமா? அல்லது இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கக்கூடிய அதிகாரத்தில் அவர் இருக்கிறாரா?

‘‘மீடியாக்களே.. தமிழ்நாட்டின் சகோதரத்துத்தின் மீதும், சமத்துவத்தின் மீதும், சமூக நல்லிகணத்தின் மீதும் காவிக் கலவர கும்பல் கல்லெறிந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்த மீடியா மேனியா விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டுச் சொல்லுங்கள்’’ என கேள்வி எழுப்பியுள்ள ராஜ்வ் காந்திக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
திமுக மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘ஊடக நண்பர்களுக்கு..! விஜய் தூங்கச் சென்றுவிட்டார். விஜய் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். விஜய் வீட்டில் அலாரம் அடிக்கிறது. விஜய் எழுந்துவிட்டார். விஜய் பல்லு விளக்குகிறார். விஜய் கழிவறையில் இருக்கிறார். விஜய் குளிக்கிறார். விஜய் வீட்டின் கதவு திறகப்படுகிறது. விஜய் கருப்புக் காரில் வெளியே வருகிறார் எனத் தங்கள் வியாபார வெறிக்கு செய்தி வெளியிட்ட ஊடக நண்பர்களுக்கு... தமிழ்நாட்டின் சகோதரத்துத்தின் மீதும், சமத்துவத்தின் மீதும், சமூக நல்லிகணத்தின் மீதும் காவிக் கலவர கும்பல் கல்லெறிந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்த மீடியா மேனியா விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டுச் சொல்லுங்கள்’’ எனத் தெரிவித்து உள்ளார்.
ஊடக நண்பர்களுக்கு.………..!
விஜய் தூங்கச் சென்றுவிட்டார்...
விஜய் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்...
விஜய் வீட்டில் அலாரம் அடிக்கிறது...
விஜய் எழுந்துவிட்டார்...
விஜய் பல்லு விளக்குகிறார்...
விஜய் கழிவறையில் இருக்கிறார்...
விஜய் குளிக்கிறார்...
விஜய் வீட்டின் கதவு…— R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். (@rajiv_dmk) December 5, 2025
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன்கள், ‘ஊடக நண்பர்களே... தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது முதல்வர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதையும் கேட்டு சொல்லுங்கள். கெத்து காட்டிய ஸ்டாலின். ஸ்டாலின் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி. நிரந்தர முதல்வர் ஸ்டாலின்... ஒரு சொட்டு தண்ணி நிக்காது. கை காட்டிய ஸ்டாலின்... என தங்கள் 200 ரூபாய்காக ஊதிக் கொண்டிருக்காமல் மக்களுக்காக போராடுங்கள்.
விஜய் திருப்பரங்குன்ற விஷயத்தில் குரல் எழுப்புவதால் இந்த பிரச்சனை தீர்ந்து விடுமா? அல்லது இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கக்கூடிய அதிகாரத்தில் அவர் இருக்கிறாரா? பத்தோடு பதினொன்றாக குரல் கொடுத்து, அரசியல் நாடகம் ஆட அவர் விரும்பவில்லை. அவர் மீது நீங்கள் என்ன விமர்சனம் வைத்தாலும் இது உண்மை.
இதையே வேங்கை வயல் பிரச்னை. இதையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பிரச்னை, இதையே கணியாமூர் பள்ளி கலவரம், இதையே மரக்காணம் கள்ளச்சாராயம், இதையே பள்ளி பிள்ளை முதல் பாட்டி வரை பாலியல் தொல்லைக்கு பிரச்னை, இதையே இதையே என பல பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் அதெற்கெல்லாம் பதில் சொன்னாரா உங்கள் முதல்வர். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நீங்கள் 144 தடை உத்தரவு போட்டு கலவரத்தை தூண்ட நீங்களே வழி வகுத்து கொடுத்துவிட்டு இப்போது என்ன பூச்சாண்டி வேலை காட்டுகிறீர்களா?’’ என பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.