MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும்.. ராமதாஸ் ஒப்புதலோடு ரொம்ப அதிகமா பேசிய அருள்

அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும்.. ராமதாஸ் ஒப்புதலோடு ரொம்ப அதிகமா பேசிய அருள்

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், ஐயாவுக்கு துரோகம் செய்த அன்புமணியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு.

3 Min read
Author : Velmurugan s
Published : Nov 29 2025, 10:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
என்னை வெல்ல யாராலும் முடியாது
Image Credit : google

என்னை வெல்ல யாராலும் முடியாது

கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மருத்துவர் ராமதாஸ், 'சினிமா பாட்டில் சொல்வார்கள் எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கு எல்லாம் தெரியும். என் உயிர்தான் பறிக்கவில்லை, உரிமையை பறித்தான், என் வேர்வை வீணாக போய்விட கூடாது அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் போனாலும் பறிக்க முடியாது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூழ்ச்சியினாலே இவன் தலைவன் என்று சொல்லிக்கொண்டு உள்ளனர். ஒட்டுமொத்த மக்களும் இவன் சூழ்ச்சியை புரிந்துகொண்டுள்ளனர். எந்த நீதிமன்றம் போனாலும் ராமதால் வெள்வார் என்னை ஜெயிக்க யாராலும் முடியாது உரிமையை பறிக்க எண்ணாதே உடைமையை பறித்துகொள் என்னிடம் பறித்து கொள்ள ஒன்றும் இல்லை 46 ஆண்டு காலம் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று எம் மக்களை சந்தித்து பேசி வளர்த்த கட்சியை முழுதும் அபகரிக்க எண்ணுகிறார் இந்த உரிமையை விட்டு கொடுக்க முடியாது. அதனால் தான் நான் தலைவர் ஆனேன் என் மகளை செயல் தலைவர் ஆக்கினேன்.

26
தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கிய அன்புமணி
Image Credit : Google

தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கிய அன்புமணி

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம் 28.05.2022 ஆம் ஆண்டு திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உன்னுடைய பதவி காலம் முடிந்து விட்டது. இப்போது ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் கமிஷனை விலைக்கு வாங்கி விட்டாய். என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறாய் தேர்தல் கமிஷனுக்கு உண்மையை சொன்னாலும் புரிவதில்லை பணம் பத்தும் செய்யும் என்பார்கள் இது தேர்தல் கமிஷன் வரை சென்றுள்ளது ஆனால் ஜெயிக்கப் போவது ராமதாஸ் தான் என்றார்.

தேர்தல் கமிஷனில் உள்ளவர்கள் பொய் சொல்கின்றனர் நாம் சொல்லும் உண்மையை தெரிந்து கொண்டும் அதற்கான பதிலை கொடுக்க முடியவில்லை, அதில் ஒரு அதிகாரி இங்கு நேர்மை இல்லை நாணயம் இல்லை என்று சொல்கிறார் அதனால் நீங்கள் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் அது திங்கட்கிழமை எடுத்துக் கொள்வார்கள்.

Related Articles

Related image1
அன்புமணி ஒரு தூசு..! சிறையிலே அடைக்க வேண்டும்..! பாமக எம்எல்ஏ அருள் அதிர்ச்சி பேச்சு
Related image2
நான் வயிறு எரிந்து சொல்கிறேன்.. அன்புமணிக்கு மேடையிலேயே சாபம் விட்ட ராமதாஸ்
36
அன்புமணி விசயத்தில் தவறு செய்துவிட்டேன்..
Image Credit : Asianet News

அன்புமணி விசயத்தில் தவறு செய்துவிட்டேன்..

நான் செய்த தவறுகள் உன்னை படிக்க வைத்தது மருத்துவராக்கியது டெல்லியில் மந்திரி ஆக்கியது கட்சிக்கு தலைவர் ஆக்கியது இப்படி எத்தனையோ தவறுகளை நான் செய்துள்ளேன். அதனால் இப்பொழுது நீ என்னோடு மோத நினைக்கிறாய் அது உன்னால் முடியாது. என் மக்கள் என் பின்னாடி உள்ளார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் பின்னாடி உள்ளார்கள். ஏனென்றால் அவர்களுக்கு உண்மை தெரிகிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றேன் என்னை பார்ப்பதற்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைத்து தரப்பினரும் என்னை பார்த்தனர். ஆனால் நீ மருத்துவரிடம் கேட்டுவிட்டு கிளம்பி விட்டாய். உன்னை பற்றி அப்போதுதான் இந்த உலகம் சரியாக புரிந்து கொண்டது. இந்த மக்களை இனி யாரும் ஏமாற்ற முடியாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

46
உன் பாச்சா பலிக்காது
Image Credit : x

உன் பாச்சா பலிக்காது

சினிமாவில் சொல்வது போல் உன் பாச்சா பலிக்காது அதுபோல் உன் பாச்சா பலிக்காது தேர்தல் கமிஷனில் வேண்டுமானால் வெற்றி பெறலாம் இங்கு நீதி தான் வெற்றி பெறும் நியாயம் தான் வெற்றி பெறும் என் பக்கம் நியாயம் இருக்கிறது மக்கள் என் பின்னால் இருக்கின்றனர்.

56
வயிறு எறிந்து சொல்கிறேன்..
Image Credit : Google

வயிறு எறிந்து சொல்கிறேன்..

இந்த கட்சி இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது அந்த மரத்தின் கிளையில் ஏறிக்கொண்டு முனை கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிலையை வெட்டுகிறார். நீ கீழே விழ வேண்டியதுதான் மரத்தின் ஆயிரக்கணக்கான விழுதுகள் மேலுக்காக வரும் மக்கள் அனைவரும் என் பக்கம்தான். உன்னுடைய அரசியல் பயணம் முடிந்து போய்விட்டது இதை வயிறு எரிந்து சொல்கிறேன் உன்னுடைய அரசியல் பயணம் முடிவடைந்துவிட்டது. இதன் பிறகுதான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வளர்ச்சி வெற்றி வருகின்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் என்ன சொல்கின்றார்களோ அதை நான் கட்டாயம் செய்வேன் வெற்றி பெறுவேன் அதிகளவு சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குவேன் அவர்கள் சட்டமன்றம் செல்வார்கள் சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள் இதை என்னால் செய்ய முடியும் என்றார். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் வெற்றி நம் பக்கம் நியாயம் நம் பக்கம் தர்மம் நம் பக்கம் என்றார்.

66
அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும்
Image Credit : x

அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும்

முன்னதாக மேடையில் பேசிய சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், ஐயாவுக்கு துரோகம் செய்த அன்புமணியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இங்கே தூசுக்கும் (அன்புமணி), இமய மலைக்கும் (ராமதாஸ்) இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து அன்புமணியை தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தார். அவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அன்புமணியின் தந்தையும், கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் மேடையில் மௌனமாக அமர்ந்திருந்ததால் அருள்ஐ அவர் தான் அப்படி பேசச்சொன்னாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
அன்புமணி ஒரு தூசு..! சிறையிலே அடைக்க வேண்டும்..! பாமக எம்எல்ஏ அருள் அதிர்ச்சி பேச்சு
Recommended image2
நான் வயிறு எரிந்து சொல்கிறேன்.. அன்புமணிக்கு மேடையிலேயே சாபம் விட்ட ராமதாஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved