MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மழைக்கு வாய்ப்பு இருக்கா? இல்லையா? வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் கொடுத்த கரண்ட் அப்டேட்!

மழைக்கு வாய்ப்பு இருக்கா? இல்லையா? வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் கொடுத்த கரண்ட் அப்டேட்!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை பொதுவாக மாறாது என்றாலும், சில இடங்களில் 2-4° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 10 2025, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தின் வானிலை நிலவரம்
Image Credit : Google

தமிழகத்தின் வானிலை நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

அதேபோல் ஜூலை 12 முதல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 15 மற்றும் 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
நாய் கடித்து எம்பிஏ பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு! ரேபிஸ் நோய் எப்படி ஏற்படுகிறது தெரியுமா?
Related image2
கும்பாபிஷேகம் நடந்த மூன்று நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி!
35
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
Image Credit : our own

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என கணித்துள்ளது.

45
வெப்ப அளவின் வேறுபாடு
Image Credit : our own

வெப்ப அளவின் வேறுபாடு

இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மேலும் இந்த இரண்டு நாட்கள் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

55
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
நாய் கடித்து எம்பிஏ பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு! ரேபிஸ் நோய் எப்படி ஏற்படுகிறது தெரியுமா?
Recommended image2
கும்பாபிஷேகம் நடந்த மூன்று நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved