MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வங்கக்கடலில் உருவாகிறது புயல்? அடுத்த 3 மணிநேரம் உஷார்! 11 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம்!

வங்கக்கடலில் உருவாகிறது புயல்? அடுத்த 3 மணிநேரம் உஷார்! 11 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம்!

தெற்கு அந்தமான் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால் கனமழை எச்சரிக்கை.

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 22 2025, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

24
Image Credit : Google

இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?
Related image2
பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு.! நகைக்கடன் தள்ளுபடி.! தமிழக அரசு சரவெடி!
34
Image Credit : Google

அதேபோல் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

44
Image Credit : our own

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது (காலை 10 மணி வரை) 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?
Recommended image2
பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு.! நகைக்கடன் தள்ளுபடி.! தமிழக அரசு சரவெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved