- Home
- Tamil Nadu News
- Job Alert : ஒரே நாளில் 5000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே ஜாக்பாட் தான்- தமிழக அரசு அசத்தல்
Job Alert : ஒரே நாளில் 5000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே ஜாக்பாட் தான்- தமிழக அரசு அசத்தல்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இன்று (20,06,2025) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 5000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.

வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்
ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வேலை தேடி பல ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. படித்த படிப்பிற்கு வேலை, குடும்ப சூழல், அதிக சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் வெளியூர்களுக்கு வேலைக்காக செல்கின்றனர். அவர்களில குறிப்பிட்ட தக்கவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மற்றவர்கள் தொடரந்து வேலைக்காக முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழக அரசு அரசு துறையிலும் தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தி அரசு பணிக்கு பணியாளரை தேர்வு செய்கின்றனர். இதற்காக இலவச பயிற்சி வகுப்பையும் அரசு நடத்தி வருகிறது.
தனியார் துறையில் வேலை
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்த முகாம்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த அந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சில சமயங்களில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20,06,2025) வெள்ளிக்கிழமை நேரம்: காலை 9,00 மணி முதல் பிற்பகல் 2,00 மணி வரை
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த கட்டிடம், டி-பிளாக், தரைத்தளத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் நேர்முகத் தேர்வு நடைபெற இருப்பதாகவும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநாடுநர்கள் கல்வித்தகுதி
8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு/ஐடிஐ / டிப்ளமோ / பட்டதாரிகள்(B.E., B.Sc., செவிலியர், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்டோர்)
தேவையானவை ஆவணங்கள்
கல்விச் சான்றிதழ் நகல்கள்
சுயவிவரம் (Bio-data)
பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
வயது வரம்பு:
18-40
நிறுவனங்கள்:
50+ தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள்
வேலைவாய்ப்பு:
5000 பணிக்காலியிடங்கள்
தனியார் துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
வேலை வாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களை பெற தமிழக அரசின் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு: 044-27426020/9486870577/ 9384499848 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல ( ஜூன் 20) இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

