- Home
- Politics
- திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
பட்டியலின சமூகத்தினுடைய தலைவராக தன்னை காட்டிக்கொண்டு, அரசியல் செய்து கொண்டு பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து கொண்டு இருக்கிறார். தனக்கு ஆபத்து வரும்போது பட்டியல் சமூகத்திற்கு பின்னாலும், அண்ணல் அம்பேத்கர் பின்னாலும் ஒளிந்து கொள்ளக்கூடியவர்.

‘‘எப்பொழுது எல்லாம் தனக்கு ஆபத்து வருகிறதோ, அப்பொழுது பட்டியல் சமூகத்திற்கு பின்னாலும், அண்ணல் அம்பேத்கர் பின்னாலும் ஒளிந்து கொள்ளக்கூடிய தலைவராகத்தான் திருமாவளவன் இருந்து கொண்டிருக்கிறார்’’ என பாமக வழக்கறிஞர் பாலு கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது பேசிய வழக்கறிஞர் பாலு, ‘‘தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை கொண்ட இயக்கம். தமிழ்நாட்டிலேயே அண்ணல் அம்பேத்கர் புகழஞ்சலி செலுத்த தகுதியான அமைப்பு என்றால் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான். தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு திராவிட இயக்கங்கள் இருந்தாலும் அண்ணல் அம்பேத்கருருடைய கொள்கைகளை கொள்கைகளாக ஏற்றுக்கொள்வதில்லை. அண்ணல் அம்பேத்கர் அவருடைய கொள்கைகளை வலியுறுத்தக்கூடிய வகையில் நீல வண்ணத்தை கட்சியில் வைத்திருக்கக்கூடிய ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.
அம்பேத்கர் சொன்னதை போன்று ஒடுக்கப்பட்ட பட்டியல் இன சமூகத்திற்கு அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கப்பட்டபோது அதை முதலில் ஒரு பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவருக்குத்தான் கொடுத்தோம். தலித் எழில் மலைக்கும், பொன்னுசாமிக்கும் மத்திய அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. ஒடுக்கப்பட்ட குறிப்பாக பட்டியலின மக்களுடைய உரிமைகள் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை பெற்றெடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்ட போது அண்ணல் அம்பேத்கருடைய கொள்கைகளை நாம் வலியுறுத்த வேண்டும், நாம் வெற்றி பெற வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பட்டியலின சமூகத்திற்காக அரசியல் செய்கிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் அண்ணல் அம்பேத்கருடைய கொள்கைகளை வலியுறுத்த கூடியவர்களாக, செயல்படுத்த கூடியவர்களாக, நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக இல்லை. குறிப்பாக திருமாவளவன் நான் சமூக நீதி காக்கக்கூடியவன் என்று சொல்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்ற பொழுது திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய திருமாவளவன் வாய்மூடி மௌனியாக இருந்து கொண்டிருக்கிறார்.
பட்டியலின சமூகத்திற்கு இப்போது 18 சதவீதமும், பழங்குடியினர் சமூகத்திற்கு ஒரு சதவீதம் 19 சதவீத இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைத்து சமூகங்களுக்கும் குறிப்பாக பட்டியலின சமூகத்தில் இருக்கக்கூடிய அருந்ததியினர், பறையர் மற்றும் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு உரிய அவரவர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா? அதேபோல சமூகத்தில் இருக்கக்கூடிய பிற சமூகத்தினருக்கும் உரிய வாய்ப்புகள் கிடைக்கிறதா? என்ற ஆய்வை மேற்கொள்ள வேண்டும். 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பட்டியல் சமூகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் பயனடைகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இத்தகைய அரசியல் எல்லாம் திருமாவளவன் செய்யாமல் ஏதோ அவர் பட்டியலின சமூகத்தினுடைய தலைவராக தன்னை காட்டிக்கொண்டு, அரசியல் செய்து கொண்டு பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து கொண்டு இருக்கிறார். எப்பொழுது எல்லாம் தனக்கு ஆபத்து வருகிறதோ, அப்பொழுது பட்டியல் சமூகத்திற்கு பின்னாலும், அண்ணல் அம்பேத்கர் பின்னாலும் ஒளிந்து கொள்ளக்கூடிய தலைவராகத்தான் திருமாவளவன் இருந்து கொண்டிருக்கிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
