அம்பலத்திற்கு வந்த 50 வருட காதல்..! பாமக தொண்டர்கள் அதிர்ச்சி!
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி சுசிலாவுடன் 50வது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான அதிகார மோதலால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தெரியாமல் பாமக தொண்டர்கள் கவலையிலும் குழப்பத்திலும் இருந்து வரும் நிலையில் தற்போது மற்றொரு பரபரப்பு தமிழக அரசியலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பாமக தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கடந்த ஜூன் 24ம் தேதி 60வது திருமண நாளை தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் கொண்டாடிய போட்டோ வெளியான நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் 50வது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இருப்பவர் சுசிலா என்றும் செவிலியர் என்பதும் தெரியவந்துள்ளது.
திண்டிவனத்தில் ராமதாஸ் சிறிய கிளினிக் வைத்திருந்தபோது சுசிலா செவிலியராக சேர்ந்துள்ளார். சுசிலாவுடன் ராமதாஸ் உறவிலிருந்து அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள்ள உள்ள ஒற்றுமையால் இந்த விஷயம் வெளியே கசியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சுசிலா தனது இரண்டாவது மனைவி என்ற உண்மையை ராமதாஸ் போட்டு உடைத்துள்ளார்.
அதாவது சுசிலாவுக்கு 66 வயதாகும் நிலையில் 50வது திருமண நாளை ராமதாஸ் கொண்டாடி இருக்கிறார். அதாவது சுசிலாவுக்கு 16 வயதாக இருக்கும்போதே ராமதாஸ் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மாமல்லபுரத்தில் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா ஹோட்டலில் இரண்டாவது மனைவியான சுசிலாவுடன் ஐம்பதாவது திருமண நாளை ராமதாஸ் கொண்டாடி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் வெளியாகின. இதில் சுசீலாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் பாமக தொண்டர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

