- Home
- Tamil Nadu News
- தவெக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
தவெக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
Petrol Bomb Attack: வேதாரண்யம் தவெக ஒன்றிய பொருளாளர் சக்திவேல் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது இருசக்கர வாகனம் வீட்டின் கதவு எரிந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தவெக நிர்வாகி
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு விஜய் மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்தவெக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரியாப்பட்டினம் காவல் நிலையம்
தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருப்பவர் சக்திவேல்(35 ). இவருடைய நண்பரான மணிகண்டன் மற்றும் சிலருக்கும் நேற்று கரியாப்பட்டினம் கடைத்தெருவில் தகராறு நடத்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வந்துள்ளார்.
பெட்ரோல் குண்டு
இந்நிலையில் சக்திவேல் சொந்தமான ஓட்டு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது பல்சர் இருசக்கர வாகனம் தீயில் கருகியது. மேலும் வீட்டின் முன்பக்க கதவு எரிந்து கொண்டிருந்தது.
போலீஸ் வழக்குப்பதிவு விசாரணை
பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அதிர்ச்சி அடைந்து பின்பக்கமாக வெளியே ஒடி வந்த சக்திவேல், அவரது தாய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவ்வப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

