- Home
- Tamil Nadu News
- அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
அதிக சீட்டு கேட்க காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் என்ன செய்தது என்று வரலாற்றில் இருந்து விடை தேட வேண்டி இருக்கிறது.

இப்போது இல்லையென்றால் எப்போது?
‘‘இரண்டு அமைச்சர்கள் எங்களுக்கும், சக கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடம் கொடுத்தால் என்ன? எங்களால்தான் திமுக ஆட்சி கட்டிலில் அமர்கிறது. திமுகவுக்கு வாக்கு வங்கி 24 விழுக்காடு தான்’’ என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இது குறித்து மூத்த பத்திரிகையார் தராசு ஷ்யாம் கூறுகையில், ‘‘இதில் விட்டு கொடுப்பது பிரதானமாக வெளிப்படுகிறதா? இல்லை அமைச்சரவையிடம் கேட்பது பிரதானமாக வெளிப்படுகிறதா? அந்த நோக்கம் குறையாமல் தங்களுக்கு இருக்கக்கூடிய நெகோஷியேஷன் அதிகரிக்கிறதா? வாக்கு அரசியலில் இரண்டு நிலைப்பாடு உண்டு. இப்போது. இல்லை இல்லவே இல்லை என்ற நிலைப்பாடு ஒன்று. இப்போது இல்லாவிட்டால் அவ்வளவுதான். வேலை முடிந்து விடும் என்று நிலைப்பாடு ஒன்று. அது கட்டாயம் காரணமாக வருவது. இன்னொரு நிலைப்பாடு நாங்கள் தேர்தலை சந்திப்பதற்கு எப்போதும் தயார். இது வேறு வகையான நிலைப்பாடு. அது பலத்தின் அடிப்படையான நிலைப்பாடு.
ஓட்டுகளை பிரித்து பார்க்க முடியாது
காங்கிரஸ் கட்சி பலத்தின் அடிப்படையில் அவர்கள் சீட் கேட்கவில்லை. ஒரு காலத்தில் 60 சீட்டுகள் கேட்டபோது எவ்வளவு சீட்டுகள் ஜெயித்தார்கள்? அதை வைத்து தான் அடுத்த முறை சீட்டு எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது. எந்த கூட்டணிலும் அப்படித்தான். திமுகவுக்கு ஓட்டு சதவிகிதம் இவ்வளவு தான் இருக்கிறது. இது தரவுகளின் அடிப்படை கூட்டணி. அரசியலில் அப்படி ஒரு தரவுகளை பிரித்துப் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் எல்லா கட்சிக்கும், எல்லா தொகுதிகளும் எவ்வளவு ஓட்டு இருக்கும் என நாம் பிரித்து பார்க்க முடியாது. அப்படியானால் எப்படி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது?
அமைச்சரவை தன்மை அடிபட்டுப்போகும்
நீங்கள் போனால்கூட நாங்கள் பலமாக இருக்கிறோம். எங்களால் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியும். இப்படியான ஒரு பலம். ஆனால் திறமை இல்லாமல் இருக்கிறவர்களுக்கு ஏன் மந்திரி பதவி கொடுக்கக் கூடாது என்றால் கூட்டணி அரசியலில் வேறு வழியில்லை. அப்படியானால் திறமையானவர்கள் கட்சிகளுக்குள் தான் இருக்கிறார்களா? நாங்கள் எல்லாம் திறமையானவர்கள் இல்லையா? எங்களுக்கெல்லாம் மந்திரி பதவி கொடுக்க கூடாதா? எனக் கேட்கிறது காங்கிரஸ். எம்.ஜி.ஆர் காலத்தில் நாராயணசாமி முதலியார் என்று ஒருவர். அவர் அதிமுகவே கிடையாது. எம்.ஜி.ஆர் ஜெயித்து ஆட்சிக்கு வந்த உடனே அவரை சட்ட அமைச்சராக ஆக்கினார். அவர் ஒரு சட்டம் மாமேதை. அப்படியான ஒரு நிலைப்பாட்டை இன்றைக்கு எந்த கட்சியாவது எடுக்குமா? வாய்ப்பே இல்லை.
தமிழ்நாடு அரசை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி ஏன் மந்திரி சபையில் மற்றவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்றால், கூட்டு மந்திரி, சபை கூட்டு பொறுப்பு அதற்கு இருக்கிறது. அப்படியானால் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அங்கே இருந்தால் வெவ்வேறு அபிப்பிராயம் இருக்கும். மந்திரி சபையின் கூட்டுப் பொறுப்பு தன்மை அடிபட்டு போகும். மாணிக்கம் தாகூர் கேட்பது நியாயமாக இருக்கலாம். அவர் கூறுகிற தரவுகள் அதைப்பற்றி எனக்கு கருத்து இல்லை. ஆனால் இங்கு தமிழகத்தில் ஆட்சி கூட்டணி ஆட்சி என்பது சத்தியம் இல்லை.
பாஜகவை போல காங்கிரஸ் என்ன செய்தது?
அப்படியானால் அதிக இடங்கள் கேட்பது சாத்தியமா? சாத்தியம் இல்லையா? அது அந்த கூட்டணியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையை பொருத்தது தான். காங்கிரஸுக்கு இப்போதைவிட அதிகமாக இரண்டு சீட்டு, மூன்று சீட்டு கொடுக்கலாம். ஆனால், அதிக சீட்டு கேட்க காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் என்ன செய்தது என்று வரலாற்றில் இருந்து விடை தேட வேண்டி இருக்கிறது. இப்போது பிஜேபி, திமுக ஆட்சி அகற்றியே ஆக வேண்டும் என்கிறது. எத்தனையோ முறை பிஜேபியின் உயர்மட்ட தலைவர்கள், உள்துறை அமைச்சர், பிரதமர் எல்லோரும் தமிழ்நாட்டிற்கு வந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
அப்படி காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் கடந்த சில மாதங்களில் தமிழகத்திற்கு வந்து என்ன பிரச்சாரம் செய்தார்கள்? எத்தனையோ விஷயங்கள் நடந்தது. என்ன செய்தார்கள்? காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எந்த முயற்சிகளையும் செய்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி தேர்தல் வேலையே செய்யவில்லை. எஸ்.ஐ.ஆர் பணியில் என்ன செய்தார்கள்? 23ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வரப்போகிறது. என்ன வேலை செய்தார்கள்? இப்போது கூட்டணி கட்சிகள் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் ஒவ்வொரு ஊரிலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருத்தர், ரெண்டு பேர் தான் போனார்கள். சிங்கிள் பர்சன்.
அப்படியானால் மாணிக்கம் தாகூர் சொல்லும் தரவுகளில் எவ்வளவு பலம் இருக்கிறது? அப்படி என்று சொன்னால் திமுக தலைமை கலைஞர் காலத்தில் இருந்து திமுக அவர்களாகவே கூட்டணி கட்சிகளைப் போகச் சொல்ல மாட்டார்கள். இவர்களாக போனால் சரிதான் என்று நினைப்பார்கள். காங்கிரஸ் கட்சி வெளியேறினால் 25 சீட்டுகள் மற்ற கட்சிகளுக்கு கொடுக்கலாம் என்று கூட ஸ்டாலின் பேசாமல் இருக்கலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
