- Home
- Tamil Nadu News
- முதல் காதலனுடன் இளம்பெண் நெருக்கம்! வீடியோ எடுத்து மிரட்டிய 2வது கள்ளக்காதலன்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
முதல் காதலனுடன் இளம்பெண் நெருக்கம்! வீடியோ எடுத்து மிரட்டிய 2வது கள்ளக்காதலன்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Vellore Crime:பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. முதல் காதலனுடன் எடுத்த அந்தரங்கப் படங்களை கைப்பற்றிய இரண்டாவது காதலன் பணம் கேட்டு மிரட்டியதால் மீண்டும் கைது.

இளம்பெண்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண். பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் அழகுகலை பயிற்சி குறித்தும், அதுதொடர்பான வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து காட்பாடி பகுதியை சேர்ந்த யுவராஜ்(30) என்பவர் இளம்பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார்.
கள்ளக்காதல்
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அப்போது இளம்பெண், யுவராஜூடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை தன்னுடைய செல்போனில் போட்டோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு விக்ரம் (34) என்ற மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்ரம், இளம்பெண்ணின் செல்போனில் யுவராஜூடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த போட்டோக்களை இளம்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
இளம்பெண்ணிடம் மிரட்டி பணம் பறிப்பு
பின்னர் அவ்வப்போது இளம்பெண்ணிடம் பணம், தங்க நகைகளை செலவுக்காக வாங்கி வந்துள்ளார். இதையறிந்த இளம்பெண்ணின் கணவர், விக்ரமை தட்டிக்கேட்டுள்ளார். மேலும் நகை, பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் சிறையில் அடைப்பு
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விக்ரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆத்திரத்தில் இருந்த விக்ரம் இளம்பெண்ணும், யுவராஜூம் நெருக்கமாக இருந்த போட்டோக்களை இளம்பெண்ணுக்கு அனுப்பி வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண் அதிர்ச்சி அடைந்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விக்ரமை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

