- Home
- Tamil Nadu News
- பார்த்ததுமே! கைய வச்சுக்கிட்டு சும்மா இல்லாத டெக்ஸ்டைல்ஸ் அதிபர்! ஓடும் ரயிலில் அலறிய பெண் ஐடி ஊழியர்!
பார்த்ததுமே! கைய வச்சுக்கிட்டு சும்மா இல்லாத டெக்ஸ்டைல்ஸ் அதிபர்! ஓடும் ரயிலில் அலறிய பெண் ஐடி ஊழியர்!
பெங்களூருவில் இருந்து ஈரோடுக்கு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஐடி பெண் ஊழியரிடம், ஆந்திராவை சேர்ந்த பயணி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சக பயணிகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட அவரை, சேலம் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை.

ஐடி பெண் ஊழியர்
ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சொந்த ஊரான ஈரோடு செல்வதற்கு பெங்களூர் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக முன்பதிவு செய்து ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர் திசையில் ஆந்திராவை சேர்ந்த சங்கர் (46) என்பவர் அமர்ந்து பயணம் செய்து வந்துள்ளார்.
ஐடி பெண்ணிடம் சில்மிஷம்
இந்நிலையில் ரயில் அதிகாலை தர்மபுரியை கடந்து வந்த கொண்டிருந்தது. தூங்கி கொண்டிருந்த ஐடி பெண் ஊழியரிடம் கண்ட இடத்தில் கைது வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர்.
சேலம் ஜங்ஷன்
இதுதொடர்பாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில் அதிகாலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ஏற்கனவே அங்கு காத்திருந்த ரயில்வே போலீஸ் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
டெக்ஸ்டைல்ஸ் அதிபர் கைது
விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த சங்கர் (46) என்பதும், சித்தூரில் டெக்ஸ்டைல்ஸ் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவர் துணிகள் வாங்குவதற்காக ஈரோட்டுக்கு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் ஐடி ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

