- Home
- Tamil Nadu News
- சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.

இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம்
தமிழகத்தின் பெரும்பான்மையான சமுதாயம் என்று சொல்லப்படக் கூடிய வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் இன்று (வெள்ளி கிழமை) சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அமைதி வழி போராட்டம்
இந்த நிலையில் போராட்டத்திற்கு தலைமை வகிப்பதற்காக வியாழக் கிழமை சென்னை வந்த ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இன்று 38 மாவட்டங்களிலும் அமைதி வழி போராட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் போராட்டம் சென்னையை குலுங்க வைக்கும். அமைதி வழி போராட்டம் இல்லையென்றால் சிறை செல்வது போல் வேற மாதிரியான போராட்டங்களைக் கையில் எடுப்போம்.
தேர்தல் வருவதால் இடஒதுக்கீட்டுக்கு வாய்ப்பு
நீங்கள் அமைதியாகவே போராட்டம் நடத்துங்கள் நான் 10.5 சதவீதம் கொடுத்து விடுகிறேன் என தமிழக முதல்வர் ஆணையிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 4 முதல் ஆறு மாதங்கள் இருப்பதால் இடஒதுக்கீடு கிடைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

