MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமை தொகைக்கு ஒப்புதல்.! வங்கி கணக்கில் ரூ.1000 எப்போது வரும்- வெளியான சூப்பர் தகவல்

மகளிர் உரிமை தொகைக்கு ஒப்புதல்.! வங்கி கணக்கில் ரூ.1000 எப்போது வரும்- வெளியான சூப்பர் தகவல்

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் பெறப்பட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்களில், தகுதியான பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 24 2025, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : tndipr

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது. 

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால்  பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

24
Image Credit : tndipr

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக யாருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மகளிர் உரிமை தொகை பெறமுடியாத மகளிர்கள் அரசின் மீது கோவத்தில் இருந்தனர்.

 எனவே இதனை சரிசெய்யும் வகையில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் உங்களுன் ஸ்டாலின் திட்டத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியது.

Related Articles

Related image1
பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை- வெளியான முக்கிய அறிவிப்பு
Related image2
திருச்செந்தூர் முருகனுக்கு அரை கிலோ தங்கத்தில் வேல்... காணிக்கையாக செலுத்திய பிரபல ஹீரோ..!
34
Image Credit : tndipr

இதனையடுத்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சுமார் 28 லட்சம் பேர் புதிதாக மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறுதி செய்யும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. 

இதனையடுத்து மகளிர் உரிமை தொகை தொடர்பாக விண்ணப்பித்த பயணாளிகளுக்கு விரைவில் எம்ஸ்எஸ் மூலம் தகவல் அளிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

44
Image Credit : magalir urimai thogai

இதில் முதல் கட்டமாக வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்  மகளிர் உரிமை தொகை வழங்க தமிழக நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் முதல்  மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Recommended image2
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Recommended image3
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Related Stories
Recommended image1
பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை- வெளியான முக்கிய அறிவிப்பு
Recommended image2
திருச்செந்தூர் முருகனுக்கு அரை கிலோ தங்கத்தில் வேல்... காணிக்கையாக செலுத்திய பிரபல ஹீரோ..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved