MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை- வெளியான முக்கிய அறிவிப்பு

பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை- வெளியான முக்கிய அறிவிப்பு

RTE admission 2025-26 Tamil Nadu :  RTE மாணவர் சேர்க்கை, மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு தொடங்குகிறது. 81,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 24 2025, 09:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : x

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் இருந்தது. 

இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் RTE சேர்க்கைக்கு 81,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை அக்டோபர் 30-31 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

25
Image Credit : School education pro

2025-26 கல்வியாண்டிற்காக, மாநிலம் முழுவதும் 7,717 பள்ளிகள் RTE அடிப்படையில் விண்ணப்பித்துள்ளன. மொத்தம் LKG வகுப்பில் 81,927 மாணவர்களும், முதல் வகுப்பில் 89 மாணவர்களும் RTE 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இறுதி கட்டச் சேர்க்கை அட்டவணை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:

அக்டோபர் 30, 2025 : ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை நடைபெறும்.

அக்டோபர் 31, 2025: ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையின் (Random Selection) மூலம் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை நடைமுறை பின்பற்றப்படும்.

Related Articles

Related image1
2 நாள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து துறை
Related image2
நவம்பர் 1 முதல்.. வங்கிக் கணக்கு, லாக்கர் விதிகளில் அதிரடி மாற்றங்கள்
35
Image Credit : GOOGLE

இந்த நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் RTE ஒதுக்கீட்டின் கீழ் EMIS தளத்தில் இணைக்கப்படுவர்; இதன் மூலம் அவர்கள் 2025-26 கல்வியாண்டிற்கான பெயர் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவார்கள். 

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) -இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

45
Image Credit : Google

RTE சட்டத்தின் படி, அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் தொடக்க நிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இச்சேர்க்கை செயல்முறை, மாநில அரசின் ஆன்லைன் RTE தளத்தின் மூலம் மாணவர்கள் பயிலும் பள்ளி அளவில் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது; 

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் இதனை மேற்பார்வை செய்கின்றன. ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

55
Image Credit : Getty

தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதையும், RTE 25% சேர்க்கை செயல்முறை மாநிலம் முழுவதும் வெளிப்படையாகவும் சமத்துவமானதாகவும் குழந்தை மையக் கொள்கைகளுடன் நிறைவேற்றப்படும் என்பதையம் மீண்டும் வலியறுத்துகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
பள்ளிகள்
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Recommended image2
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Recommended image3
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Related Stories
Recommended image1
2 நாள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து துறை
Recommended image2
நவம்பர் 1 முதல்.. வங்கிக் கணக்கு, லாக்கர் விதிகளில் அதிரடி மாற்றங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved