- Home
- Tamil Nadu News
- சொத்து வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த சென்னை மாநகராட்சி! முழு விவரம்!
சொத்து வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த சென்னை மாநகராட்சி! முழு விவரம்!
சொத்து வரியை செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவிள்ளது. சொத்து வரியை செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Property Tax
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. வரி ஆண்டு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல்-செப்டம்பர் (செலுத்த காலக்கெடு: செப்டம்பர் 30) மற்றும் அக்டோபர்-மார்ச் (செலுத்த காலக்கெடு: மார்ச் 31) என 2 இரண்டு பிரிவுகளாக உள்ளது.
சொத்து வரி
சொத்து வரியை முன்கூட்டியே செலுத்தினால் ஊக்கத்தொகை கிடைக்கும். அதே வேளையில் சொத்து வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், நடப்பு அரையாண்டுக்கான சொத்து வரியை செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி அறிவிப்பு
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய (1/2025-26) சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்தி, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு-84(2)ன்படி, மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சொத்து வரியை எப்படி செலுத்துவது?
சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், அரசு இ-சேவை மையங்கள், இணையதளம் மூலமாகவும் மற்றும் RTGS/NEFT, Pay-tm. நம்ம சென்னை செயலி, கிரெடிட், டெபிட், UPI Service, பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறையில் உள்ள காசோலை இயந்திரம் மூலமாகவும், பெருநகர சென்னை மாநகராட்சியால் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் பொருத்தப்பட்ட QR Code மூலமாகவும் மற்றும் WhatApp எண்- 9445061913 மூலமாகவும் செலுத்தலாம்.
சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரியினை உடனடியாக செலுத்தி, சென்னை மாநகர வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறது.

