MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த 3 மணிநேரம்! கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட்!

அடுத்த 3 மணிநேரம்! கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலுக்குப் பிறகு, சென்னையில் பகலில் வெயிலும் மாலையில் மழையும் பெய்து வருகிறது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Jun 11 2025, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாட்டி வதைத்து வந்த வெயில்
Image Credit : Asianet News

வாட்டி வதைத்து வந்த வெயில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது வெயில். பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

24
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை
Image Credit : our own

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை? வெளியான லிஸ்ட்!
Related image2
இவரு தவெக நிர்வாகியா? திமுகவா? எ.வ.வேலுவுக்கு 500 ரூபாய் கட்டு மாலை! விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட மாவட்ட செயலாளர்!
34
சென்னையின் நிலவரம் என்ன?
Image Credit : our own

சென்னையின் நிலவரம் என்ன?

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

44
அடுத்த 3 மணிநேரத்தில் மழை
Image Credit : our own

அடுத்த 3 மணிநேரத்தில் மழை

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் (அதாவது காலை 10 மணிவரை) 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை? வெளியான லிஸ்ட்!
Recommended image2
இவரு தவெக நிர்வாகியா? திமுகவா? எ.வ.வேலுவுக்கு 500 ரூபாய் கட்டு மாலை! விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட மாவட்ட செயலாளர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved