MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்தா? இல்ல எக்ஸ்ட்ரா மதிப்பெண் கொடுங்க! சொல்வது யார் தெரியுமா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்தா? இல்ல எக்ஸ்ட்ரா மதிப்பெண் கொடுங்க! சொல்வது யார் தெரியுமா?

TNPSC குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்திற்குப் புறம்பான கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதால், தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் அல்லது பாடத்திட்டத்திற்குப் புறம்பான கேள்விகளுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சமமான மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 24 2025, 07:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
Image Credit : our own

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் 11 லட்சத்து 50 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஆனால், இந்த முறை, வினாத்தாளில் பொதுத் தமிழ் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கவலை தெரிவித்திருந்தனர். தமிழ்மொழிப் பகுதியில் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

25
 குரூப் 4 தேர்வை ரத்து செய்ய கோரிக்கை
Image Credit : our own

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய கோரிக்கை

இந்நிலையில் குரூப் 4 தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என சீமான், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூறியிருந்தனர். இந்நிலையில் அரசு வேலை என்ற கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.

Related Articles

Related image1
மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை!
Related image2
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு ரத்தாகிறதா? மறு தேர்வு நடத்த திட்டமா?
35
அண்ணாமலை
Image Credit : X/Annamalai

அண்ணாமலை

இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: TNPSC குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என, தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

45
அரசு வேலை
Image Credit : ANI

அரசு வேலை

எதிர்மறை மதிப்பெண் இல்லை என்பதால், அனைத்துத் தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேர்வுக்குக் கடினமாக உழைத்துத் தயாரானவர்களும், இறுதியில் அதிர்ஷ்டம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு வேலைக்குத் தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்துப் பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டியதும் கூட.

55
பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்
Image Credit : our own

பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்

அரசு வேலை என்ற கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, தமிழக அரசு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற TNPSC குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் அல்லது, ஒட்டுமொத்தமாக அந்தக் கேள்விகளை நீக்கி, மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற பாடத்திடத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை பாஜக
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை!
Recommended image2
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு ரத்தாகிறதா? மறு தேர்வு நடத்த திட்டமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved