- Home
- Tamil Nadu News
- ராமதாஸ் என்ன கண்காட்சியா.? அவருக்கு ஏதாவது ஆச்சுனா தொலைத்து விடுவேன்- பாசத்தில் பொங்கிய அன்புமணி
ராமதாஸ் என்ன கண்காட்சியா.? அவருக்கு ஏதாவது ஆச்சுனா தொலைத்து விடுவேன்- பாசத்தில் பொங்கிய அன்புமணி
மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓய்வில் உள்ளார். இந்நிலையில், ஐயா என்ன கண்காட்சியா .? ஐயாவுடைய உயிர், ஐயாவுடனைய பாதுகாப்பு தான் முக்கியம். ராமதாசுக்கு ஏதாவது என்றால் தொலைத்து விடுவேன் என அன்புமணி எச்சரிக்கை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான டாக்டர். ராமதாஸ் (வயது 87), கடந்த வாரம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதயப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 6 ஆம் தேதி காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது,
இதனையடுத்து ராமதாஸ் உடல் நிலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல்நிலையை கேட்டறிந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிவடைந்ததையடுத்து ராமதாஸ் கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பினார். இது தொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி நலமுடன் வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி 12.10.2025 வரை ஒய்வு எடுக்க உள்ளார்.
எனவே மருத்துவர் அய்யா அவர்களின் பார்வையாளர் சந்திப்பு 12.10.2025 வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவர் அய்யாவை சந்திக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகின்ற 13.10.2025 திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நேரடியாக சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று உத்தண்டியில் பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, ராமதாஸ் உடல்நிலை தொடர்பாக கூறுகையில், மருத்துவர் ஐயா உடல் நிலை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சோதனை செய்ததில் ஒன்றும் இல்லை. சிலர் போன் செய்து ஐயாவிற்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்கள், ஐயாவிற்கு உடல் நிலை சரியில்லை வந்து பாருங்கள் என அழைத்துள்ளனர். ரொம்ப அசிங்கமா இருக்கு, ராமதாஸை வைத்து உடன் இருப்பவர்கள் டிராமா செய்கிறார்கள்.
ஐயாவிற்கு 87 வயது ஆகிறது. செக்ஆப் சென்றுள்ளார் அப்போது ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. எந்தவித இன்பெக்ஷன் ஏற்படக்கூடாது. ஆனால் யார் யாரோ உள்ளே வந்து பார்த்துட்டு போகிறார்கள். வந்து பாருங்கள், வந்து பாருங்கள் என கூப்பிடுகிறார்கள்.
ஐயா என்ன எக்ஷிபிஷனா.? ஐயாவுடைய உயிர், ஐயாவுடனைய பாதுகாப்பு முக்கியம். ராமதாசுக்கு ஏதாவது என்றால் தொலைத்து விடுவேன். நான் இருக்கும் போது காரிடார் பக்கம் கூட யாரையும் விட மாட்டேன். இப்போ கதவை கூட தட்டுவதில்லை. நேராக உள்ளே செல்கிறார்கள். தூங்கவிடுவதில்லை , பாத்ரூமில் இருந்தால் கூடா ஐயோ போன் என கொடுக்கிறார்கள் என அன்புமணி விமர்சித்தார்.

