- Home
- Tamil Nadu News
- விஜய்க்கு ஃபுல் சப்போர்ட் தரும் அஜித்..! கலங்கிப்போன திமுக... கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
விஜய்க்கு ஃபுல் சப்போர்ட் தரும் அஜித்..! கலங்கிப்போன திமுக... கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
என்னுடைய பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்றி காட்ட முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. நான் எப்போதும் விஜய்க்கு நல்லதையே நினைத்தும், வாழ்த்தியும் இருக்கிறேன் என்று நடிகர் அஜித்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு பிடித்த பாதையில் பயணிக்க விரும்புகிறேன்..
நடிகர் அஜித்குமார் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் கரூர் அசம்பாவிதத்திற்கு விஜய் மட்டும் காரணம் அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவர் ஆங்கிலத்தில் பேசிய தகவல்கள் சிலரால் விஜய்க்கு எதிரான கருத்து என்பது போல் தகவல் பரபரப்பப்பட்டது. இந்நிலையில் அஜித்குமார் தனது பேட்டி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆங்கில ஊடகத்திற்கு நான் கொடுத்த பேட்டி இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு சேர்ப்பதற்கு எதிலாக ஒருசிலரால் அவர்களது அஜென்டாவிற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு தெரியும். இங்கு எதை எடுத்தாலும் பரபரப்பாக்கத்தான் முயல்வார்கள். ஆனால் நான் நேர்மறையான எண்ணங்களுடன் எனக்கு பிடித்த பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.
விஜய்க்கு நல்லதையே நினைக்கிறேன்
ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்கள், விளையாட்டு பாத்திரிகையாளார், அரசியல் பத்திரிகையாளர்கள் என தனித்தனியாக இருந்தனர். ஆனால் இன்று அரசியல் பத்திரிகையாளர்களை விட ஒரு சில சினிமா பத்திரிகையாளர்களே அரசியல்மயமாகி உள்ளனர். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. மாறாக இதை அஜித்துக்கும், விஜய்க்கும் இடையிலான மோதல். அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான போர் என்பது போல அதை ஆக்கிவிட்டனர்.
என்னுடைய பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்றி காட்ட முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. நான் எப்போதும் விஜய்க்கு நல்லதையே நினைத்தும், வாழ்த்தியும் இருக்கிறேன்.
அடுத்த 10 - 20 ஆண்டுகள் கழித்து..
நாம் நச்சு கலந்த ஒரு சமூகமாக மாறிவிட்டோம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய இந்த ஆங்கில ஊடகத்திற்கான பேட்டி அடுத்த 10 - 20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கும். உங்களையும், உங்கள் குடும்பங்களையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது என்றால் என் படங்களை பாருங்கள் என்று என் ரசிகர்களுக்கும், பிற ரசிகர்களுக்கும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். படத்தைப் பாருங்கள் என கட்டாயப்படுத்த மாட்டேன். ஓட்டு கேட்டும் வரமாட்டேன். படங்களில் நடிப்பது மற்றும் கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது என எனக்கு பிடித்தவற்றில் கவனம் செலுத்துவேன்.
ஒரு நபர் மட்டும் காரணமல்ல
கரூரில் நடந்தது துரதிஷ்டவசமானது. அது நீண்ட நாட்களாக நடக்க காத்திருந்த ஒரு விபத்து. பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள், நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன் தான். என்னிடமும் தவறுகள் உள்ளன. நாம் அனைவரும் குடியுரிமை என்ன என்பதை பார்த்து அதை பின்பற்ற வேண்டும்.
என்னுடைய பூர்வீகம் அடிக்கடி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. நான் வேற்று மொழிக்காரன் என்று கூறுபவர்களே, ஒருநாள் என்னை தமிழன் என்று அழைப்பார்கள்.
சில சமூகங்கள் சுரண்டப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றன. அதுபோன்ற மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க, அரசியல் கட்சிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் உள்ளனர். உள்நோக்கங்களுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதாக, சில போலி சமூக ஆர்வலர்களும் உள்ளனர். அதுபோன்ற போலிகளால் மூளைச்சலவை ஆகாமல் இருக்க, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாட்டுக்காக உயிரே போனாலும்..
கார் ரேஸில் சாதித்து இந்த மாநித்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என நம்புகிறேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில், என் உயிரே போனாலும் பரவாயில்லை.

