- Home
- Tamil Nadu News
- Ex.Mp சத்தியபாமா அதிரடி நீக்கம்..! கூண்டோடு களை எடுக்கபடும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்.. அடங்காத இபிஎஸ்
Ex.Mp சத்தியபாமா அதிரடி நீக்கம்..! கூண்டோடு களை எடுக்கபடும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்.. அடங்காத இபிஎஸ்
கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பட்ட செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்களான சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் ஒன்றியச்செயலாளர் உள்ளிட்ட 14 பேர் நீக்கம்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக மட்டும் நீடித்து வந்தார்.
ஓபிஎஸ்வுடன் காரில் சென்ற செங்கோட்டையன்
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன்னுக்கு சென்றது மட்டுமல்லாமல் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 14 பேர் நீக்கம்
இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பட்ட செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக நவம்பர் 31ம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தற்போது செங்கோட்டையன் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்.பி.யும், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் ஒன்றியச்செயலாளர் நீக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி Vs செங்கோட்டையன்
மேலும் குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 14 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே செங்கேட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

