- Home
- Tamil Nadu News
- 120 கி.மீ. வேகத்தில் இன்னோவா கார்! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி? பரபர தகவல்!
120 கி.மீ. வேகத்தில் இன்னோவா கார்! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி? பரபர தகவல்!
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்னோவா கார் ஸ்விஃப்ட் டிசைர் கார் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Innova car
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்துள்ள கண்ணங்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன். கட்டிட தொழிலாளியான இவர். மனைவி, மகன்கள் உள்ளிட்ட 9 பேருடன் மதுரையில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்னோவா காரில் மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை மாரியப்பன் ஓட்டி வந்துள்ளார். அந்த காரில் மனைவி அன்பரசி (32), மகன்கள் பிரவீன் (10), அஸ்வின்(8) மற்றும் உறவினர்களான அக்ஷயா தேவி, பாலகிருஷ்ணவேணி (40) அவரது மகள் பிரியதர்ஷினி (20), மகன் சுபிசந்தோஷ் (18), பெரியவர் மில்கிஸ் (60) ஆகிய 9 பேர் இருந்துள்ளனர்.
nellai car accident
சென்டர்மீடியனில் மோதி எதிர்புறம் சாலைக்கு பாய்ந்த கார்
மாலை 4 மணியளவில் உணவு உண்ட மயக்கத்தில் மாரியப்பன் காரை ஓட்டி வந்துள்ளார். கார் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் கீழூர் பகுதியில் உள்ள பாலம் இறங்கியதும் வரும் சாலை வளைவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய இன்னோவா கார் சென்டர்மீடியனில் மோதி எதிர்புறம் சாலைக்கு பாய்ந்தது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
car accident News
எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதல்
அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஸ்விஃப்ட் டிசைர் கார் மீது இன்னோவா கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் எதிரே வந்த நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்கரெட் மேரி, மகன் ஜோபர்ட், இவரது மனைவி அமுதா மற்றும் இவர்களது குழந்தைகள் ஜொகனா, ஜொகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
nellai accident
விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
இந்த கோர விபத்தில் மாரியப்பனுடன் காரில் பயணித்த மில்கிஸ் என்பவரும் உயிரிழந்தார். மொத்தம் 7 உயிர்களை பலி கொண்ட விபத்தில் ஸ்விஃப்ட் டிசைர் காரில் பயணித்த ஜோகனா என்ற இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த போலீசார் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் உதவியுடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இனி பெண்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு! சென்னை காவல்துறை சூப்பர் திட்டம்!
police investigation
120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த கார்
லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பனிடம் போலீசார் விசாரித்த போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாகவும், அப்போது தூக்க கலக்கத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறமாறாக ஓடி எதிர்புறம் சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதியதாக தெரிவித்தார். மேலும் உயிரிழந்த 7 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.