MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஈரோடு
  • ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை...! விஜய் பிரச்சாரத்தால் துள்ளி குதிக்கும் மாணவர்கள்

ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை...! விஜய் பிரச்சாரத்தால் துள்ளி குதிக்கும் மாணவர்கள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய்யின் முதல் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தால்  ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 17 2025, 11:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : tvk

தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் விஜய் நடத்தும் முதல் பொதுவெளி பிரசாரம் ஈரோட்டில் நாளை நடைபெற உள்ளது. இதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

24
Image Credit : Asianet News

அதாவது விஜய்யின் வாகனம் வரும் வழித்தடத்தில் எந்த இடத்திலும் வரவேற்பு அளிக்கக்கூடாது. இந்நிகழ்ச்சியை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த அனுமதி, பிரசாரத்தின் போது விஜய்யுடன் முக்கிய நபர்கள் மட்டுமே வாகனத்தில் இருக்க வேண்டும். மேலும் தவெக தொண்டர்கள் 10,000 பேர், பொதுமக்கள் 25,000 பேர் பங்கேற்க உள்ளனர். பிரசார கூட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மைதானம் முழுவதும் மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?
Related image2
பள்ளி மாணவர்களே! அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றமா? வெளியான பரபரப்பு தகவல்!
34
Image Credit : Asianet News

இந்நிலையில், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அருகே பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் காரணமாக அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

44
Image Credit : our own

இந்நிலையில் அந்த தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி சார்பில் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு வாட்ஸ்-அப் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் நாளை நடைபெற இருந்த தேர்வு 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விடுமுறை
பள்ளி மாணவர்
டிவி.கே. விஜய்
செங்கோட்டையன்
பள்ளிகள் விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
Recommended image2
உதயநிதி இளம் பெரியாரா? பெரியார் ஸ்பெல்லிங் தெரியுமா அவருக்கு? ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு
Recommended image3
மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
Related Stories
Recommended image1
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?
Recommended image2
பள்ளி மாணவர்களே! அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றமா? வெளியான பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved