- Home
- குற்றம்
- சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?
திருப்பத்தூர் அருகே 6 ஏக்கர் நிலத்தகராறில், பெற்ற தாயை அவரது இளைய மகள் கீதா மற்றும் மருமகன் சிதம்பரம் ஆகியோர் கொலை செய்துள்ளனர். கள்ளக்காதலன் மீது பழிபோட கொலையை பாலியல் வன்கொடுமை போல் நாடகமாடிய நிலையில், போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு மலை பகுதியில் உள்ள நடுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது சின்னகாளி (45). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சாம்பசிவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து மனைவி சின்னகாளி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கு துணையாக அதே பகுதியில் வசித்து வந்த இளைய மகள் கீதா, அவரது கணவர் சிதம்பரம் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அரசு திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பாக வழங்கப்பட்ட 6 ஏக்கர் சொத்து சின்னகாளி பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கீதா பெயரில் ஒரு சொத்தை எழுதி வைத்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் வனத்துறை சார்பில் வழங்கப்பட்ட 6 ஏக்கர் சொத்தையும் தனது பெயருக்கு எழுதி வைக்கும் படி கீதா கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், கீதா மீது எழுதி வைக்காமல் சின்னகாளி அவரது கள்ளக்காதலன் பெயரில் எழுதி வைக்க முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த கீதா நான் தான் உன்னை பார்த்து கொள்கிறேன் சொத்தை என் பெயரில் தான் எழுதி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு சொல்லியும் சொத்தை தன் பெயரில் எழுதி வைக்காததால் தாய் சின்னகாளி கோபத்தில் கீதா இருந்துள்ளார். இந்நிலையில் பெற்ற தாயை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுகுப்பம் பகுதியில் உள்ள வீட்டின் அருகே உள்ள காட்டிற்கு சென்ற கணவர் இன்னும் வரவில்லை. தேடுவது போல் நைசாக பேசி தாய் சின்னகாளியை அழைத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த மருமகன் சிதம்பரம் (25) சின்னகாளியிடம் சொத்து குறித்து வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மகள் கீதா தாய் சின்னகாளியின் கையை பிடித்து கொண்டதை அடுத்து மருமகன் மாமியாரின் தலையில் கல்லை கொண்டு தாக்கியதில் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து சின்னகாளியின் கள்ளக்காதலன் கொலை செய்தது போல அவர் அணிந்து இருந்த ஆடைகளை கலைத்து விட்டு சம்பவ இடத்தில் பூ, கர்சீப் போட்டுவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் கீதாவையும், ஆண்கள் மத்திய சிறையில் சிதம்பரத்தையும் அடைத்தனர்.

