MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • பார்முக்கு திரும்பிய கையோடு புதிய சாதனை படைத்த 'ஹிட்மேன்' ரோகித் சர்மா!

பார்முக்கு திரும்பிய கையோடு புதிய சாதனை படைத்த 'ஹிட்மேன்' ரோகித் சர்மா!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
| Updated : May 02 2025, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Rohit Sharma set a new record in IPL: ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்களில் 217 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை தழுவியது. இந்த போட்டியில் மும்பை இந்தியனஸ் வீரர் ரோகித் சர்மா 36 பந்தில் 53 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

24
Rohit Sharma, IPL

Rohit Sharma, IPL

ரோகித் சர்மா புதிய சாதனை 

ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டங்களில் சொதப்பிய ஹிட்மேன் ரோஹித் சர்மா, தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ளார். கடந்த 4 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். மும்பை அணிக்காக 6,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

Related Articles

Related image1
போரிவலியில் இருந்து துவங்கிய ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம்!!
34
Rohit Sharma Record, Cricket

Rohit Sharma Record, Cricket

டி20 கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் ரோகித் சர்மா ஆவார். இதற்கு முன்பு விராட் கோலி 8871 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது ரோகித் சர்மாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

ஒரே அணிக்காக டி20-ல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் 

  • விராட் கோலி: 8871 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  • ரோஹித் சர்மா: 6024 (மும்பை இந்தியன்ஸ்)
  • ஜேம்ஸ் வின்ஸ்: 5939 (ஹாம்ப்ஷைர்)
  • சுரேஷ் ரெய்னா: 5528 (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • எம்.எஸ். தோனி: 5269 (சென்னை சூப்பர் கிங்ஸ்)

 

44
Mumbai Indians vs Rajasthan Royals

Mumbai Indians vs Rajasthan Royals

2 சதங்கள், 39 அரைசதங்கள்

ரோகித் சர்மா மும்பை அணிக்காக 231 போட்டிகளில் விளையாடி 6,024 ரன்கள் எடுத்துள்ளார். இதில் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளும் அடங்கும். 2 சதங்கள், 39 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் மும்பை வீரர் ரோகித் தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா முதலில் ஒரு அவுட்டில் இருந்து தப்பி பிழைத்தார்.  ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசிய பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆட்டமிழந்ததாக அம்பயர் அறிவித்தார்.

ஆனால், டிஆர்எஸ் முறையில் ரோகித் சர்மா மறுஆய்வு கோரினார். பால் டிராக்கிங்கில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வதாக தெரியவந்தது. இதனால் அம்பயர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரோகித் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
 

 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image3
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related Stories
Recommended image1
போரிவலியில் இருந்து துவங்கிய ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved