- Home
- Sports
- Sports Cricket
- நான் கிரிக்கெட் விளையாட காரணமே இவர்கள் 2 பேர் தான்! மனம் திறந்து பேசிய சுப்மன் கில்!
நான் கிரிக்கெட் விளையாட காரணமே இவர்கள் 2 பேர் தான்! மனம் திறந்து பேசிய சுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Shubman Gill Speaks About His Cricket Journey
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள் எடுத்தார். ஆனால் ஒருபக்கம் மிகவும் அற்புதமாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
சுப்மன் கில் இரட்டை சதம்
387 பந்துகளில் 30 பவுண்டரி, 3 சிக்சருடன் 269 ரன்கள் எடுத்த சுப்மன் கில் ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்தார். சேனா நாடுகளில் முதல் இரட்டை சதம் அடித்த ஆசிய கேப்டன், இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் அடித்த இந்திய வீரர், வெளிநாடுகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் அடித்த இந்திய கேப்டன், இரட்டை சதம் அடித்த இளம் கேப்டன் என ஒரே ஒரு இன்னிங்சில் பல்வேறு சாதனைகளை சுப்மன் கில் எட்டிப்பிடித்துள்ளார்.
மாபெரும் சாதனை நிகழ்த்திய சுப்மன் கில்லுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உன் பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்
இந்நிலையில், மகனின் ஆட்டத்தை பார்த்து சுப்மன் கில்லின் தாய், தந்தை பாராட்டியுள்ளனர். 2ம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டது. சுப்மன் கில்லின் தந்தை லக்விந்தர் சிங், "மகனே, நீ மிகவும் நன்றாக விளையாடினாய் இன்று உன் பேட்டிங்கைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்,.
மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன். நீ இளமையாக இருந்த போது, நீ 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் விளையாடுவாய், நீ கவலையற்றவனாக இருந்தாய். அதேபோல் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது'' என்றார்.
சுப்மன் கில் எல்லையில்லா மகிழ்ச்சி
சுப்மன் கில்லின் தாயார், ''உன் பேட்டிங்கை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோல் தொடர்ந்து செயல்படு. கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கட்டும்'' என்று கூறியுள்ளார். தனது பெற்றோரிடமிருந்து வந்த செய்தியைக் கேட்டதும் சுப்மன் கில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 'இந்தச் செய்தி எனக்கு மிகவும் அர்த்தம் தருகிறது.
நான் கிரிக்கெட் விளையாடுவதற்குக் காரணம் என் தந்தைதான் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவர் (என் தந்தை) மற்றும் எனது சிறந்த நண்பர் ஆகிய இருவர் மட்டுமே. நான் அவர்களின் கருத்தைக் கேட்டு பரிசீலிக்கிறேன். நான் முச்சதம் அடிக்காதது எனது தந்தைக்கு வருத்தம் தான்'' என்று தெரிவித்தார்.

