MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • "பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"

"பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்த 'ஹை-வோல்டேஜ்' போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி கெத்தாக சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தது.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 16 2026, 07:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உலகக்கோப்பையில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதிக்கம்: 8 வது வெற்றி..!
Image Credit : Getty

உலகக்கோப்பையில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதிக்கம்: 8-வது வெற்றி..!

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா மீண்டும் தனது வெற்றி வேட்டையைத் தொடர்ந்துள்ளது. இதுவரை நடந்த 9 நேருக்கு நேர் மோதல்களில், இது இந்தியா பெற்ற 8-வது அபார வெற்றியாகும்.

ஆட்டத்தின் போக்கையே மாற்றிய இஷான் கிஷன்

போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணிக்கு ஒரு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் 'டக்-அவுட்' ஆகி வெளியேற, ஒட்டுமொத்த மைதானமும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

25
இஷான் - திலக்: பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த 'யங் இந்தியா' கூட்டணி!
Image Credit : ANI

இஷான் - திலக்: பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த 'யங் இந்தியா' கூட்டணி!

அபிஷேக் சர்மாவின் விக்கெட் சீக்கிரம் விழுந்ததும், இந்திய ரசிகர்கள் சற்று கலக்கத்தில் இருந்தனர். ஆனால், அதன் பிறகு களம் புகுந்த இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஜோடி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது.

Related Articles

Related image1
IND vs PAK: இந்தியா முதலில் பேட்டிங்.. பாக்., கேப்டனை புறக்கணித்த சூர்யகுமார் யாதவ்! அதை கவனீச்சிங்களா?
Related image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
35
ஹர்திக் பாண்டியா: பேட்டிங்கில் 'டக்'... பந்துவீச்சில் 'டான்'!
Image Credit : X@BCCI

ஹர்திக் பாண்டியா: பேட்டிங்கில் 'டக்'... பந்துவீச்சில் 'டான்'!

இந்தியா - பாகிஸ்தான் போரில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்திருக்கலாம். ஆனால், கையில் பந்து கிடைத்ததும் அவர் காட்டிய விஸ்வரூபம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது.

2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவை வதம் செய்த ஃபார்மில் இருந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் விக்கெட்டை வீழ்த்தி மாஸ் காட்டினார் பாண்டியா.

45
பழிக்குப்பழி... பும்ரா ஸ்டைல்!
Image Credit : Getty

பழிக்குப்பழி... பும்ரா ஸ்டைல்!

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சையம் அயூப், பும்ராவின் முதல் பந்திலேயே ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை விளாசி இந்திய ரசிகர்களை அதிரவைத்தார். ஆனால், பும்ரா போன்ற ஜாம்பவானிடம் இது போன்ற சீண்டல்கள் வேலைக்கு ஆகாது என்பதை அடுத்த வினாடியே நிரூபித்தார். சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே, தனது அசுரவேகப் பந்துவீச்சால் சையம் அயூப்பை நிலைகுலையச் செய்து, அவரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

55
கேப் விடாமல் அடித்த இந்திய வீரர்கள்
Image Credit : ANI

கேப் விடாமல் அடித்த இந்திய வீரர்கள்

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு துளி அளவும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்திய அணியின் ஆதிக்கத்தை தாக்குபிடிக்க முடியாத பாகிஸ்தான் விரர்கள் வேகவேகமாக பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் அந்த அணி வெறும் 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா
பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image3
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related Stories
Recommended image1
IND vs PAK: இந்தியா முதலில் பேட்டிங்.. பாக்., கேப்டனை புறக்கணித்த சூர்யகுமார் யாதவ்! அதை கவனீச்சிங்களா?
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved