MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பூச்சாண்டி காட்டிய பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்துள்ளது.

2 Min read
Author : Rayar r
| Updated : Feb 15 2026, 10:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி
Image Credit : X@BCCI

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் டி20 உலக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 

பின்பு விளையாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியில் இஷான் கிஷன் 40 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 77 ரன்கள் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார்.

23
இந்திய அணியை காப்பாற்றிய இஷான் கிஷன்
Image Credit : Getty

இந்திய அணியை காப்பாற்றிய இஷான் கிஷன்

இந்திய அணி தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மாவை (0) இழந்தாலும், மற்ற வீரர்கள் தடுமாறினாலும் இஷான் கிஷன் தனி ஆளாக போராடி 40 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 77 ரன்கள் அடித்து மாஸ் காட்டினார். திலக் வர்மா 25 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே 17 பந்தில் 27 ரன்களும், ரிங்கு சிங் 6 பந்தில் 11 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தானின் படுமோசமான பேட்டிங்

பின்பு சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரிலேயே சாஹிப்சாதா ஃபர்ஹான் டக் அவுட் ஆனார். அடுத்து பும்ரா தனது ஒரே ஓவரில் சயூம் அயூப் (6), பாகிஸ்தான் கேப்ட சல்மான் அலி ஆகாவை (4) காலி செய்தார். தொடர்ந்து பாபர் அசாமும் (5) அக்சர் படேல் பந்தில் வெளியேறினார். பாகிஸ்தான் 34/4 என பரிதவித்தது.

Related Articles

Related image1
IND vs PAK: இந்தியா முதலில் பேட்டிங்.. பாக்., கேப்டனை புறக்கணித்த சூர்யகுமார் யாதவ்! அதை கவனீச்சிங்களா?
Related image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
33
பாகிஸ்தான் படுதோல்வி
Image Credit : Getty

பாகிஸ்தான் படுதோல்வி

இந்த சரிவில் இருந்து பாகிஸ்தான் அணியால் மீளவே முடியவில்லை. நமது வீரர்களின் பாஸ்ட் பவுலிங் மற்றும் ஸ்பின் பவுலிங் என எதையும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் மட்டும் போராடி 44 ரன்கள் அடித்தார். மற்ற யாரும் சோபிக்கவில்லை. இதில் 3 பேர் டக் அவுட் ஆனதும் அடங்கும். முடிவில் பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பேசமா ஊர்லயே இருந்திருக்கலாமோ..

இந்திய அணி தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், திலக் வர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. 

இந்த போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி வந்தது. பின்னர் ஐசிசியின் மிரட்டலுக்கு பணிந்து விளையாடியது. இப்படி படுமோசமாக தோற்றத்துக்கு நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம் என இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை கிண்டலடித்து வருகின்றனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
Recommended image2
10ஆம் வகுப்பு தேர்வு எழுதாத 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. பின்னணி காரணம் இதுதான்!
Recommended image3
IND vs PAK: இந்தியா முதலில் பேட்டிங்.. பாக்., கேப்டனை புறக்கணித்த சூர்யகுமார் யாதவ்! அதை கவனீச்சிங்களா?
Related Stories
Recommended image1
IND vs PAK: இந்தியா முதலில் பேட்டிங்.. பாக்., கேப்டனை புறக்கணித்த சூர்யகுமார் யாதவ்! அதை கவனீச்சிங்களா?
Recommended image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved