MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சிறப்பாக சம்பவம் செய்த குஜராத் டைட்டன்ஸ் – ஓவரா ஆட்டம் போட்ட SRHக்கு ஆப்பு!

சிறப்பாக சம்பவம் செய்த குஜராத் டைட்டன்ஸ் – ஓவரா ஆட்டம் போட்ட SRHக்கு ஆப்பு!

GT vs SRH IPL 2025 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 03 2025, 01:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
அகமதாபாத் மைதானம்: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அகமதாபாத் மைதானம்: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

GT vs SRH IPL 2025 : குஜராத்தின் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 51ஆவது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக சன்ரைசர்ஸ் அணி அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது சாய் சுதர்சன், சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரது அதிரடியால் எளிதாக 224/6 ரன்கள் குவித்தது.

29
குஜராத் டைட்டன்ஸ் 224 ரன்கள் குவிப்பு

குஜராத் டைட்டன்ஸ் 224 ரன்கள் குவிப்பு

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பவுலிங் மற்றும் பீல்டிங் சரியில்லை. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் மற்றும் ஜீஷன் அன்சாரி ஒரு விக்கெட் எடுத்தார். இதையடுத்து 225 ரன்களை இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. ஐபிஎல் 2025 தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் திகழந்தது.

Related Articles

Related image1
17 ஆண்டுகளுக்கு பிறகு SRH முதல் வெற்றி; ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய CSK!
39
சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்:

சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்:

இந்த அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா என்று பலம் வாய்ந்த் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால், இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவைத் தவிர மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

49
அபிஷேக் சர்மா 74 ரன்கள்

அபிஷேக் சர்மா 74 ரன்கள்

இதில், ஹெட் 20 ரன்கள் எடுத்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த நம்பிக்கை நட்சத்திரமான இஷான் கிஷான் ஒரு போட்டியில் மட்டும் சதம் அடித்த நிலையில் மற்ற எல்லா போட்டிகளிலும் சொதப்பி வந்தார். அதே போன்று இன்றைய போட்டியிலும் 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

59
கிளாசென் 23 ரன்கள்

கிளாசென் 23 ரன்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசென் தன் பங்கிற்கு 23 ரன்களில் நடையை கட்டினார். அனிகேத் வர்மா 3, கமிந்து மெண்டிஸ் 0 என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை நின்ற நிதிஷ் ரெட்டி 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 19 ரன்கள் சேர்த்தார்.

69
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 186/6 ரன்கள் எடுத்தது

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 186/6 ரன்கள் எடுத்தது

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 186/6 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி கிட்டத்தட்ட ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை.

79
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீதமுள்ள போட்டிகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீதமுள்ள போட்டிகள்

எஞ்சிய 4 போட்டிகளில் முறையே டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.

89
குஜராத் டைட்டன்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ்:

இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டனர். சிறப்பாக பந்து வீசிய பிரஷித் கிருஷ்ணா இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செயப்பட்டார். அவர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.

99
ஜிடி எஞ்சிய 4 போட்டிகள்

ஜிடி எஞ்சிய 4 போட்டிகள்

ஜிடி எஞ்சிய 4 போட்டிகளில் முறையே மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
SRH vs GT
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில்
ஐபிஎல்
ஐபிஎல் 2025
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல் 2025 பிளேஆஃப் அணிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image3
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related Stories
Recommended image1
17 ஆண்டுகளுக்கு பிறகு SRH முதல் வெற்றி; ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய CSK!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved