MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • விளையாடவே மாட்டோம்! விரக்தியில் பாகிஸ்தான் அணி எடுத்த திடீர் முடிவு!

விளையாடவே மாட்டோம்! விரக்தியில் பாகிஸ்தான் அணி எடுத்த திடீர் முடிவு!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கைகுலுக்கல் சர்ச்சையைத் தொடர்ந்து, போட்டி நடுவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆசியக் கோப்பையிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 Min read
Author : SG Balan
Published : Sep 15 2025, 06:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆசியக் கோப்பை சர்ச்சை
Image Credit : Getty

ஆசியக் கோப்பை சர்ச்சை

இந்தியாவுக்கு எதிரான ஒ கிரிக்கெட் போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இந்த சம்பவத்தில், போட்டி நடுவர் ஆண்டி பை கிராஃப்ட் (Andy Pycroft) மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அவரை பதவியில் இருந்து நீக்காவிட்டால், ஆசிய கோப்பையில் ஐக்கிய அரபு அமீகரகத்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அணி எச்சரித்துள்ளது.

24
கைகுலுக்காமல் சென்ற இந்திய வீரர்கள்
Image Credit : Getty

கைகுலுக்காமல் சென்ற இந்திய வீரர்கள்

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்க மறுத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (PCB) கோபமடையச் செய்துள்ளது. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.

இது தொடர்பாக முதலில் இந்திய அணிக்கு எதிராக புகார் அளித்த பாகிஸ்தான், தற்போது போட்டி நடுவர் தங்கள் புகாரை கண்டுகொள்ளவில்லை என்று கூறி அவரை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

Related Articles

Related image1
பாக். அணியுடன் கைகுலுக்காத இந்திய வீரர்கள்! 'இந்த' முடிவுக்கு மூளையாக இருந்தது இவரா? வெளியான தகவல்!
Related image2
கை குலுக்க மறுத்த இந்தியா..! ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கதறும் பாகிஸ்தான்
34
பாகிஸ்தான் அணியின் கோரிக்கை
Image Credit : X/ Cricket Fever

பாகிஸ்தான் அணியின் கோரிக்கை

அக்டோபர் 7ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் நடைபெற உள்ள போட்டியில் இருந்து பை கிராஃப்ட் நீக்கப்படாவிட்டால், அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த போட்டிக்கும் அவரே நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இப்போட்டியை நடத்தவில்லை என்றாலும், பை கிராஃப்ட்க்கு எதிராக புகார் ஒன்றை அளித்ததாகக் கூறப்படுகிறது.

44
ஐசிசியில் பாகிஸ்தான் அணியின் புகார்
Image Credit : ANI

ஐசிசியில் பாகிஸ்தான் அணியின் புகார்

"போட்டி நடுவர் ஐ.சி.சி-யின் நடத்தை விதிகள் மற்றும் கிரிக்கெட்டின் ஆன்மா குறித்த எம்.சி.சி சட்டங்களை மீறியுள்ளார். உடனடியாக ஆசிய கோப்பையிலிருந்து அவரை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி-யிடம் புகார் அளித்துள்ளது," என்று மொஹ்சின் நக்வி 'X' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, போட்டி முடிந்த பிறகு 'கைகுலுக்க வேண்டாம்' என்ற விதிமுறை குறித்து பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரிவிக்க நடுவர் மறந்துவிட்டார் என்றும், இந்த தவறுக்கு பாகிஸ்தான் அணியிடம் அவர் மன்னிப்பு கோரினார் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், ஐ.சி.சி இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு பொதுவான அறிக்கையையும் வெளியிடவில்லை.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
பாகிஸ்தான்
ஆசியக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"
Recommended image2
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image3
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Related Stories
Recommended image1
பாக். அணியுடன் கைகுலுக்காத இந்திய வீரர்கள்! 'இந்த' முடிவுக்கு மூளையாக இருந்தது இவரா? வெளியான தகவல்!
Recommended image2
கை குலுக்க மறுத்த இந்தியா..! ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கதறும் பாகிஸ்தான்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved