வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சரியான திசைகளில் சுப சின்னங்களைக் கொண்ட ஓவியங்களை வைப்பது அதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் ஈர்க்கும். ஓவியங்கள் உடைந்தோ அல்லது கறைபடிந்தோ இருக்கக்கூடாது என்பதும் முக்கியம்.

வாஸ்து படி பணம் வர 5 சிறந்த படங்கள்
வாஸ்து சாஸ்திரம் படி, வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் மற்றும் ஓவியங்கள் மனநிலையையும் சூழலையும் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சுப சின்னங்களை கொண்ட ஓவியங்கள் சரியான திசையில் வைக்கப்பட்டால், அது வீட்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அலங்காரத்திற்காக மட்டும் அல்லாமல், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கருத்து ஆகும்.
பணமரம் படம்
கிழக்கு அல்லது வட திசையில் ஏழு ஓடும் குதிரைகள் படம் வைப்பது வேகமான முன்னேற்றத்தையும் வெற்றியையும் குறிக்கிறது. இது தொழில் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது. மேலும், தெற்கு அல்லது கிழக்கு திசையில் பண மரம் அல்லது தங்க நாணயங்கள் கொண்ட படம் வைப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சி வாஸ்து படம்
வடகிழக்கு திசையில் ஓடும் நீர் அல்லது நீர்வீழ்ச்சி ஓவியம் வைப்பது தொடர்ந்து வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது. நீர் என்பது செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. மயில் ஓவியம் அமைதி, அழகு மற்றும் நேர்மறை ஆற்றலை குறிக்கும். அதை கிழக்கு-வடகிழக்கு திசையில் வைப்பது குடும்ப ஒற்றுமைக்கு உதவும் என கூறினார்.
உதயசூரியன் ஓவியம்
கிழக்கு திசையில் உதய சூரியன் படம் வைப்பது புதிய தொடக்கங்களையும் தொழில் வாய்ப்புகளையும் குறிக்கிறது. இது வாழ்க்கையில் புதிய பாதைகள் திறக்க உதவும் என நம்பப்படுகிறது.
ஏழு குதிரைகள் ஓவியம்
வீட்டில் எந்த ஓவியத்தை வைத்தாலும், அது உடைந்தது அல்லது கறைபடிந்தது இருக்கக் கூடாது. சரியான தேர்வு மற்றும் திசை அமைப்பு செல்வ வளத்திற்கான முதல் படியாக கருதப்படுகிறது.

