கோவிலில் செருப்பு காணாமல் போனால் அதிர்ஷ்டமா? ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்கள்?
கோவிலுக்குச் செல்லும்போது செருப்பு தொலைவது ஒரு பொதுவான அனுபவம். இது கூட்ட நெரிசல் போன்ற நடைமுறை காரணங்களால் நடந்தாலும், ஜோதிட ரீதியாக இது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

கோவிலில் செருப்பு தொலைந்தால்
கோவிலுக்கு செல்லும் போது நாம் முதலில் செய்யும் விஷயம் செருப்பை வெளியில் கழற்றுவது தான். இது ஒரு வழக்கமான நடைமுறை மட்டுமல்ல, ஆன்மீக மரபின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. ஆனால் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது செருப்பு காணாமல் போவது பலருக்கும் நேர்ந்த அனுபவமாகும்.
இந்துமத வழக்கம்
சிலர் இதை சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ளவும், சிலர் "இது நல்ல அறிகுறியா?" என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். பொதுவாக கோவில்களில் ஒரே மாதிரி செருப்புகள் அதிகம் இருக்கும். கூட்ட நெரிசலில் ஒருவர் தவறுதலாக மற்றொருவரின் செருப்பை எடுத்துச் செல்வதும், சில சமயங்களில் திருட்டு சம்பவங்களும் நிகழலாம். இதனால் செருப்பு தொலைந்துவிடும்.
சனி தோஷம்
சில சூழ்நிலைகள் பல பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும், சிலர் இதற்கு ஆன்மீக விளக்கங்களையும் வழங்குகிறார்கள். இதுபற்றி சில ஜோதிடர்கள் கூறுவதாவது, ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்களுக்கு கோவிலில் செருப்பு தொலைவது சனி தாக்கம் குறைவதற்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும், பாவ சுமை குறைதல், கடன் சுமை நீங்குதல், வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் தொடங்குதல் போன்ற நல்ல மாற்றங்களின் தொடக்கமாகவும் இதை சிலர் கருதுகின்றனர்.
கோவில் மரபு
இருப்பினும், இது நம்பிக்கையை சார்ந்த விளக்கம்தான். கோவிலுக்குள் செருப்பை கழற்றி வைப்பது அகந்தை, பொறாமை, கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளை விட்டுவிட்டு இறைவனிடம் தூய மனதுடன் செல்லும் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது பக்தியின் ஒரு வெளிப்பாடாகவும் விளங்குகிறது.
ராமாயணம் சம்பவம்
இராமாயணத்தில், இராமர் வனவாசம் சென்றபோது, பரதன் அவருடைய பாதரசத்தை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதனால் செருப்பு அதிகாரம், பொறுப்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் சின்னமாகவும் கருதப்படுகிறது. அதனால் செருப்புக்கு நம் கலாச்சாரத்தில் ஆன்மீக அர்த்தமும் உண்டு.

