- Home
- Cinema
- கருத்து
- Indra Review : வசந்த் ரவி நடித்த இந்திரா... ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Indra Review : வசந்த் ரவி நடித்த இந்திரா... ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரின் பிர்சாடா நடிப்பில் வெளியாகி உள்ள இந்திரா திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

Indra Movie Twitter Review
வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் இந்திரா. இப்படத்தில் நாயகியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். மேலும் அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜ்மல் இசையமைத்துள்ளார். ஜேஎஸ்எம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து உள்ள இப்படத்தை சபரீஷ் நந்தா இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், தங்கள் விமர்சனத்தை தங்கள எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இந்திரா ட்விட்டர் விமர்சனம்
இந்திரா, ஒரு அபார்ட்மெண்ட்டில் நடக்கும் மர்ம கதை, திரில்லர் கதை, பழி வாங்கல் கதை, விறுவிறு கதை என எப்படி வேணாலும் சொல்லலாம். ஒரு சீரியல் கில்லர் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காதல் கதையும் கூட. போலீஸ் விசாரணை, டுவிஸ்ட், சொல்லப்படும் கரு, வில்லன், வசந்த் ரவி, சுனில், அனிகா நடிப்பு நச், கிளைமாக்ஸ் செம. கோபக்கார போலீஸ் இன்ஸ்பெக்டராக, பார்வையற்ற காதல் கணவனாக, இன்னொரு மாறுபட்ட கேரக்டர் என 3 விதமான நடிப்பில் வசந்த் ரவி நடிப்பு அருமை. சுனில் தன் பங்கிற்கு மிரட்டி இருக்கிறார். இடைவேளை வரை ஒரு கதை, அப்புறம் ஒரு டிவிஸ்ட் என திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இந்திரா படம் எப்படி இருக்கு?
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், சாதாரணமான சைக்கோ திரில்லர் கதை மாதிரி தான் இருந்தாலும், எங்கும் சலிப்பு இல்லாமல் கதை நகர்கிறது. இண்டர்வெல் ட்விஸ்ட் வேறலெவலில் உள்ளது. படத்திற்கு பின்னணி இசை கூடுதல் பலமா இருக்கு என படம் பார்த்த ரசிகர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிகவும் சுவாரசியமான, எதிர்பாராத திருப்பம் கொண்ட சீரியல் கில்லர் த்ரில்லர் படம் இது, முதல் பாதியை விட இரண்டாம் பாதியை மிகவும் சிறப்பானதாக உள்ளது. வசந்த் ரவி தொடர்ந்து பிரபலமில்லாத படங்களுக்கு தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
இந்திரா எக்ஸ் தள விமர்சனம்
கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த ஒரு பிடிமான புலனாய்வு த்ரில்லர் படம், கடைசி வரை உங்களை கவர்ந்திழுக்கும். வசந்த் ரவி ஒரு திடமான போலீஸ் அதிகாரியாக ஜொலிக்கிறார், அதே நேரத்தில் மெஹ்ரின் பிர்சாடா தனது வசீகரத்தாலும் நேர்த்தியான நடிப்பாலும் ஈர்க்கிறார். சுனில், அனிகா ஆகியோரும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். அஜ்மலின் பின்னணி இசை பதற்றத்தை அதிகரிக்கிறது. பிரவீனின்கூர்மையான எடிட்டிங் மூலம் கூடுதலாக பலம் சேர்த்திருக்கிறார். ஒரு சுவாரஸ்யமான மற்றும் தெளிவான த்ரில்லரை உருவாக்கியதற்காக இயக்குனர் சபரீஷ் நந்தாவுக்கு பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

