MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ‘போதும் நிறுத்துங்க.. திரும்பத் திரும்ப தப்பு செய்யுறீங்க...’ கடுமையாக எச்சரித்த அமித் ஷா ..! திமிறிய இபிஎஸ் .!

‘போதும் நிறுத்துங்க.. திரும்பத் திரும்ப தப்பு செய்யுறீங்க...’ கடுமையாக எச்சரித்த அமித் ஷா ..! திமிறிய இபிஎஸ் .!

அமித் ஷாவின் சமரசம் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. எடப்பாடி பழனிசாமியோ இந்த அணிகள் இணைப்பு பற்றி பற்றி பேச வேண்டாம். வேறு விஷயங்கள் இருந்தால் பேசலாம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Sep 17 2025, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

டெல்லியில் நேற்றைய தினம் நடைபெற்ற அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் என்ன நடந்தது என்று குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் ஆங்கில ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ‘‘அதிமுகவில் அணிகள் இணைப்பு சம்பந்தமாக அந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து செயல்படும் டிடிவி. தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டால் அதிமுக வலிமையாக இருக்கும். அதிமுக மீண்டும் பழைய வலிமையோடு தேர்தலை சந்தித்தால் தான் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் வெற்றி பெறுவது கடினம்.

23
Image Credit : google

எனவே கடந்த 2021ல் இதனை வலியுறுத்தி இருந்தேன். எல்லோரையும் இணைத்திருந்தால் சாதகமாக அமைந்திருக்கும். 2021- ல் நீங்கள் டிடிவி. தினகரன் உள்ளிட்டோரை சேர்த்துக் கொள்ளும் மாட்டேன் என்று சொன்ன காரணத்தினால் தான் ஆட்சியை கோட்டை விட்டோம். அதே தவறை 2026லும் செய்ய வேண்டாம். பிரிந்து சென்றவர்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

அமித் ஷாவியின் இந்த பேச்சை விரும்பாத எடப்பாடி பழனி சாமி, ‘ ‘என்னைப் பொறுத்தவரை அதற்கான வாய்ப்பே கிடையாது. அணிகள் இணைப்பு என்பது சாத்தியமே கிடையாது. அவர்கள் எங்களது கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள். கட்சியை அழிக்க வேண்டும், இரட்டை இலையை முடக்க வேண்டும். எங்களது சின்னத்துக்கு எதிராகவே போட்டி போட்டு எங்களை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது முடியாத காரியம். அதைத்தான் நான் சென்னையிலும் பேசிவிட்டு வந்திருக்கிறேன்’’ என இபிஎஸ் பிடிவாதமாக தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

Related Articles

Related image1
திமுகவை மாற்ற போறாங்களாம்! அப்படி சொன்னவங்க கதி என்னாச்சு தெரியுமா? விஜய்யை இறங்கி அடித்த ஸ்டாலின்!
33
Image Credit : facebook/ eps

எனவே அமித் ஷாவின் சமரசம் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. எடப்பாடி பழனிசாமியோ இந்த அணிகள் இணைப்பு பற்றி பற்றி பேச வேண்டாம். வேறு விஷயங்கள் இருந்தால் பேசலாம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.  20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், 2026 இடையே உள்ள வேறுபாடுகள் சச்சரவுகள் தடையாக இருக்கிறது. அவற்றை சரி செய்வது எப்படி என்று பேசி ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!
Recommended image2
ஸ்ரீரங்கம் தொகுதியை தாரை வார்க்கும் எடப்பாடி..! கொந்தளிக்கும் முத்தரையர்கள்..!
Recommended image3
ஸ்டாலினை எவனாவது ஏற்றுக் கொள்வானா..? மு.க.அழகிரி எடுத்த ஷாக் முடிவு... இன்ப அதிர்ச்சியில் அதிமுக..!
Related Stories
Recommended image1
திமுகவை மாற்ற போறாங்களாம்! அப்படி சொன்னவங்க கதி என்னாச்சு தெரியுமா? விஜய்யை இறங்கி அடித்த ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved