- Home
- இந்தியா
- பாகிஸ்தான் மீது பெரிய தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா? ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு
பாகிஸ்தான் மீது பெரிய தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா? ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ள நிலையில், விடுப்பில் உள்ள ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு.

Operation Sindoor - இந்திய ராணுவம் அதிரடி
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
Operation Sindoor - துள்ளிய தாக்குதல்
இதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள பகுதிகளில் இந்த துள்ளிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தமாக 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Sofia Khureshi
மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீதோ, வர்த்தக நிலையங்கள் மீதோ, பொதுமக்கள் மீதோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை முழுக்க முழுக்க பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Operation Sindoor - ராணுவ வீரர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள இந்திய தலைவர்கள் பயங்கர வாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் தாக்குதலால் இரு நாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் சொந்த விடுப்பில் உள்ள பாதுகாப்புப்படை வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய உள்துற அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் பெரிய தாக்குதலை நிகழ்த்தக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

