- Home
- இந்தியா
- Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
இண்டிகோ விமானங்களின் திடீர் ரத்தால் இந்தியா முழுவதும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமானப் பயணத்திற்கு மாற்றாக பேருந்துகளை நாடிய நிலையில், அவற்றின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதோடு, ரயில்களிலும் இடமில்லாததால் மக்கள் தவிக்கின்றனர்.

பயணிகளை வச்சி செஞ்ச இண்டிகோ ஏர்லையன்ஸ்
இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்துக்கு ஏற்பட்ட திடீர் தடங்கல் மக்கள் பயணத் திட்டங்களை தலைகீழாக மாற்றியுள்ளது. இண்டிகோ நிறுவனம் நாடு தழுவிய ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய, விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அவதியில் சிக்கினர்.
ரத்து பட்டியல் நீளும் சூழலில், பயணிகள் தகவல் பலகைகளின் முன் கவலையுடன் நிற்கும் காட்சிகள் நாடு முழுவதும் பதிவானது. இதன் பின்னணியில் சமீபத்தில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டண உச்சவரம்புகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தர்ப்பவாத விலை உயர்வுகளைத் தடுக்கவும் பொதுமக்களை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிலைமை சீராகும் வரை இது தொடரும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இரண்டு மடங்கு உயர்ந்த பேருந்து கட்டணம்
பிரச்சினை விமானத்தில் மட்டும் முடிவடையவில்லை! விமானங்கள் ரத்து ஆக, மக்கள் பேருந்துகளுக்கு திரும்ப, அங்கு கூட கட்டணங்கள் பறக்கத் துவங்கிவிட்டன. மும்பை–பெங்களூரு பேருந்து பயணம் 8,000 ரூபாய் வரை எட்டியதாக பயணிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது சாதாரண குடும்பத்திற்கு 'பிளைட் டிக்கெட்' ரேட்டில் கூட உயர்ந்ததாக பயணச் செலவாக மாறியுள்ளது. ரயில்களும் நிரம்பிப் போனதால், பலருக்கு பயணிக்க வாய்ப்பே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
பேருந்து விலைகளுக்கும் கண்காணிப்பு அவசியம்
இந்த சிக்கலை சமாளிக்க அரசு கூடுதல் ரயில்களை இயக்கி நிவாரணம் அளிக்க முயன்றாலும், பயண திண்டாட்டம் தொடர்கிறது. அடுத்த சில நாட்கள் பயணிகள் விலையை விட அதிர்ஷ்டத்தை நம்பியே பயணத்தை திட்டமிட வேண்டிய சூழல். விமான கட்டண உச்சவரம்பு போன்று பேருந்து விலைகளுக்கும் கண்காணிப்புத் தேவை என்ற குரலும் எழுந்துள்ளது.

