- Home
- குற்றம்
- அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
வந்தவாசி அருகே ஒரு தாய் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து 18 வயது மகளை கடத்தி, அவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த மகளின் புகாரின் பேரில் கேரளாவில் பதுங்கியிருந்த தாய் கள்ளக்காதலனை கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சித்ரா (42). இவர்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன் ஏழுமலை உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் மூத்த மகளுக்கு திருமணமாகி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளார். 18 வயது இளைய மகள் மட்டும் தாய் சித்ராவுடன் இருந்து வருகிறார். சித்ராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்து வரும் கந்தன்(31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் இருந்த தாய் சித்ரா மற்றும் தங்கை மாயமானதாக கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் மூத்த மகள் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தாய் சித்ராவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கேரள விரைந்து தேயிலைத்தோட்ட பகுதியில் தாய், மகள் மற்றும் கந்தன் ஆகியோர் மூன்று பேரையும் மீட்டு கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதில், இளம்பெண் தன்னை வாயில் துணியை வைத்து தாயுடன் சேர்ந்து கந்தன் கடத்தியது மட்டுமல்லாமல் தனக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதற்கு தாய் சித்ராவும் உடந்தையாக இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆள் கடத்தல், கட்டாய திருமணம், பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சித்ரா, கந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார். கள்ளக்காதலனுக்கு மகளை கடத்தி தாயே திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

