Woman shooter raped: ஃபரிதாபாத் ஹோட்டல் பாலியல் வழக்கு: துப்பாக்கி சுடும் போட்டிக்கு வந்த 23 வயது வீராங்கனை ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு. தோழி வெளியே சென்றபோது அறையில் என்ன நடந்தது? தோழி உட்பட மூவர் கைது விசாரணை தீவிரம்.
Woman shooter Raped: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் 23 வயது துப்பாக்கி சுடும் வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஒரு பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
துப்பாக்கி சுடும் சுடும் வீராங்கனை பலாத்காரம்
போலீசார் தகவலின்படி, பாதிக்கப்பட்ட வீராங்கனை செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக தனது பெண் தோழியுடன் ஃபரிதாபாத் வந்திருந்தார். போட்டி முடிந்ததும் இருவரும் ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், அப்போது நிலைமை மாறி, ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை வரை சென்றுள்ளது.
மெட்ரோவில் நடந்த சந்திப்பு?
புதன்கிழமை மாலை போட்டி முடிந்த பிறகு, வீராங்கனையின் தோழி ஃபரிதாபாத்தில் வசிக்கும் தனது நண்பரான கௌரவ் என்பவருக்கு போன் செய்துள்ளார். தன்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் விடுமாறு கௌரவிடம் கேட்டுள்ளார். கௌரவ் தனது நண்பர் சத்யேந்திராவுடன் அங்கு வந்துள்ளார். அதன்பிறகு, நால்வரும் அன்று இரவு ஃபரிதாபாத்திலேயே தங்க முடிவு செய்தனர்.
ஒரே அறையில் நான்கு பேர்
நால்வரும் ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்தனர். ஒரு அறையில் அனைவரும் மது அருந்தியுள்ளனர். ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாகத் தெரிந்தாலும் இரவு நேரமாக நிலைமை முற்றிலும் மாறியது.
இரவு 9 மணிக்கு எல்லாவற்றையும் மாற்றிய அந்த சம்பவம்?
புகாரளித்த வீராங்கனையின் குற்றச்சாட்டின்படி, இரவு சுமார் 9 மணியளவில் அவரது தோழி, கௌரவ் உடன் சில பொருட்களை வாங்குவதற்காக ஹோட்டலுக்கு கீழே சென்றுள்ளார். அப்போது அறையில் இருந்த சத்யேந்திரா, அவரை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது தோழி அறைக்குத் திரும்பியதும், நடந்த முழு சம்பவத்தையும் அவரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு, மற்றொரு நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் அறையில் பூட்டி வைக்கப்பட்டு, உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் எடுத்த நடவடிக்கை என்ன?
இந்த சம்பவத்தை அடுத்து சராய் குவாஜா காவல் நிலைய போலீசார் ஹோட்டலுக்கு விரைந்து வந்து சத்யேந்திரா, கௌரவ் மற்றும் பெண் தோழியை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காவல் நிலைய அதிகாரி ராகேஷ் குமாரின் கூறுகையில், மூன்று குற்றவாளிகளும் ஃபரிதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது?
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெண் தோழியின் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுகிறது. இந்த சம்பவம் ஒரு சதியா அல்லது தற்செயலாக நடந்த குற்றமா என்பது குறித்து போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


