MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோவை ரோடு ஷோவால் கடும் அப்செட்; தவெக-வினருக்கு அன்புக்கட்டளையிட்ட விஜய்!

கோவை ரோடு ஷோவால் கடும் அப்செட்; தவெக-வினருக்கு அன்புக்கட்டளையிட்ட விஜய்!

கோவையில் ரோடு ஷோ நடத்திய விஜய், அப்போது ரசிகர்கள் செய்த சில விரும்பத்தகாத செயல்கள் தனக்கு மிகவும் கவலை அளித்ததாக கூறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 30 2025, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

TVK Vijay Statement about Coimbatore Road Show : நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அண்மையில் கோவையில் நடைபெற்ற தவெக-வின் பூத் கமிட்டி மீட்டிங்கில் கலந்துகொள்ள சென்றபோது, அங்கு ரோடு ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த ரோடு ஷோவில் தன்மீது அன்பை பொழிந்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்தும், அதில் நடந்த சில விரும்பத்தகாத செயல்களை கண்டித்தும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய்.

24
தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய்

கோவை தங்கம்ஸ்

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது : “என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.

நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். 

Related Articles

Related image1
விஜய் வருகையால் ஸ்தம்பித்த கோவை; தவெக-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
Related image2
தனி விமானத்தில் வந்த விஜய்யை இத்தனை பேர் டிராக் செய்தார்களா?
34
கோவையில் விஜய்

கோவையில் விஜய்

ரசிகர்களுக்கு அன்புக்கட்டளையிட்ட விஜய்

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. 

அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன். நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்; அதுதான் நீங்க… இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும். உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ். அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன். ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும். 

44
விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்

விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்

ஸ்ட்ரிக்ட்டா சொன்ன விஜய்

எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கதான் எனக்கு precious. இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல. உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். உங்க அன்ப நான் மதிக்கறேன். இனி எப்பவும் மதிப்பேன். அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது.

நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க; தப்பே இல்ல. நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால, நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன். செய்வீங்க… செய்றீங்க…ஓகே?" என பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
தமிழக வெற்றி கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜப்பான் வாடை அடிக்குதே... வா வாத்தியார் டிரெய்லர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கு?
Recommended image2
திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
Recommended image3
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!
Related Stories
Recommended image1
விஜய் வருகையால் ஸ்தம்பித்த கோவை; தவெக-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
Recommended image2
தனி விமானத்தில் வந்த விஜய்யை இத்தனை பேர் டிராக் செய்தார்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved