- Home
- Cinema
- VJ Manimegalai: கொட்டும் பணம்; சென்னையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கிய விஜே மணிமேகலை! இத்தனை கோடியா?
VJ Manimegalai: கொட்டும் பணம்; சென்னையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கிய விஜே மணிமேகலை! இத்தனை கோடியா?
விஜே மணிமேகலை தற்போது விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவியுள்ள நிலையில், சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை இவர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2010-ம் ஆண்டு, சன் மியூசிக் (Sun Music) தொலைக்காட்சியில் ஒரு விஜே-வாக தன்னுடைய கரியரை துவங்கியவர் தான் மணிமேகலை. கல்லூரி படிப்பை முடித்த கையேடு சன் மியூஸிக்கில் இணைந்த இவர், கிட்டத்தட்ட 9 வருடங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.
டான்ஸர் ஹுசைனை காதலித்து திருமணம்
ஃபேமஸான தொகுப்பாளினியாக இருக்கும் போதே, டான்ஸர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரின் மதமும் வெவ்வேறு என்பதால், இருதரப்பு பெற்றோரும் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் கடந்து, இருவரும் மிகவும் எளிமையாக ரிஜிஸ்டர் ஆபிசில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஃபார்ம் ஹவுசில் மணிமேகலை என்ன செய்றாங்கன்னு பாருங்க.. இதுல போஸ் வேற.. வைரல் போட்டோஸ்..
கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி
திருமணத்திற்கு பின்னர் ஒரு சாதாரண வாடகை வீட்டில் குடியேறிய மணிமேகலை (VJ Manimegalai) , பின்னர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல சவால்களை சந்திக்கவேண்டி இருந்தது. மணிமேகலைக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த போது தான், இவரை அழைத்து டான்ஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி. கணவனுடன் சேர்ந்து, சிறப்பாக டான்ஸ் ஆடிய மணிமேகலை, 2-ஆவது ரன்னரப்பாக மாறினார்.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி
இதன் பின்னர் 'குக் வித் கோமாளி' (Cook With Comali) நிகழ்ச்சியில் தொடர்ந்து 4 சீசன்களாக கோமாளியாக இருந்த மணிமேகலை 5-ஆவது சீசனில் தொகுப்பாளினியாக மாறினார். இவர் தொகுப்பாளராக இருந்தபோது, பிரியங்காவின் குறுக்கீடு இருந்ததன் காரணமான மணிமேகலை, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறப்பட்டது. மணிமேகலை போட்ட பதிவும் மறைமுகமாக இதை உறுதி செய்தாலும் பின்னர் அதை மறுப்பது போல் பிரியங்காவுடன் புகைப்படம் வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ-எண்ட்ரி கொடுத்த மணிமேகலை... ஆனா கோமாளியா இல்ல!
ஜீ தமிழ் தொலைக்காட்சி
தற்போது, விஜய் டிவி-டிவியில் (Vijay Tv Manimegalai) இருந்து அதிரடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவி உள்ளார் மணிமேகலை. கடந்த 2 வாரத்திற்கு முன்னர் துவங்கப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை விஜயுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதில் நடுவர்களாக, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், வரலட்சுமி சரத்குமார், சினேகா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பண்ணை வீடு கட்டி குடியேறிய மணிமேகலை
விஜய் டிவியில் இருக்கும் போதே கொரோனா சமயத்தில், தான் வசித்து வந்த கிராமத்தில் நிலம் ஒன்றை வாங்கி அங்கு பண்ணை வீடு கட்டி குடியேறிய மணிமேகலை, அதற்க்கு முன்பே சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் வாங்கி இருந்தார். அதே போல் 2 சொகுசு கார், சொகுசு பைக் என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி வளர்த்தார். இவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை விட, யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
கொரோனாவால் பிரச்சனையில் சிக்கிய விஜே மணிமேகலை! இப்படி ஒரு சோதனையா?
சொகுசு அப்பார்ட்மெண்ட்
இதை தொடர்ந்து மணிமேகலை சென்னையில் புதிய சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் விலை மட்டுமே 1 கோடியில் இருந்து 1.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான தகவலை புகைப்படத்துடன், கணவருடன் சேர்ந்து அறிவித்துள்ள நிலையில் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த வீட்டின் சாவி தற்போது மணிமேகலை மற்றும் அவரின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.