MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!

முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதல், திருமணத்தில் முடியவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானில் இவர்களது திருமணமும் ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 16 2026, 07:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தெரிஞ்சு போச்சு மக்களே
Image Credit : Zee5

தெரிஞ்சு போச்சு மக்களே

தென்னிந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு காதல் கதை, இப்போது திருமண பந்தத்தில் இணையப் போகிறது. 'கீதா கோவிந்தம்' படத்தில் தொடங்கிய இவர்களின் கெமிஸ்ட்ரி, திரையைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் மலர்ந்துள்ள செய்தி இப்போது வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாகத் தங்கள் காதலை மறைமுகமாகப் பேணி வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடியின் திருமணத் தேதி குறித்த ரகசியம் தற்போது கசிந்துள்ளது.

24
திருமணத் தேதி மற்றும் இடம்
Image Credit : X

திருமணத் தேதி மற்றும் இடம்

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் தகவல்களின்படி, இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 26, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் பாணியில் மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்த ரகசியத் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Related Articles

Related image1
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
Related image2
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
34
ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வரவேற்பு
Image Credit : instagram

ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வரவேற்பு

திருமணம் ராஜஸ்தானில் நடந்தாலும், தென்னிந்தியத் திரையுலகப் பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. வைரலாகி வரும் அழைப்பிதழின்படி, மார்ச் 4, 2026 அன்று ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெறும் எனத் தெரிகிறது.கடந்த அக்டோபர் மாதமே இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த திருமணத் தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

44
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
Image Credit : facebook

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

இதுவரை விஜய் தேவரகொண்டா அல்லது ராஷ்மிகா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை. இருப்பினும், சமீபகாலமாகப் பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் ஜோடியாகத் தென்படுவதும், ராஷ்மிகாவிடம் திருமணத்தைப் பற்றிக் கேட்கும்போது அவர் காட்டும் வெட்கப் புன்னகையும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளன. 'ரௌடி' ஹீரோவும், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகாவும் மணமேடை ஏறுவதைக் காண ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவிக்கத் தொடங்கிவிட்டனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திரைப்பட விமர்சனம்
சினிமா காட்சியகம்
இசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
எல்லாம் முடிந்தது என நினைத்த அஞ்சலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சத்யா செய்த அந்த ரகசிய உதவி என்ன?! கெட்டிமேளம் அப்டேட்.!
Recommended image2
Singappenne : ஆனந்தி - அன்புவின் ஜாலி மொமெண்ட்ஸ்! கோகிலாவை அதிர வைத்த மாமனார் & மாமியார்.. கதையில் புதிய திருப்பம்!
Recommended image3
"வீரம் உண்டு வெற்றி உண்டு" - அதிரடி அறிவிப்புடன் களமிறங்கும் சோயோன்.! இசை ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்.! எப்போ தெரியுமா?
Related Stories
Recommended image1
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
Recommended image2
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved