நயன்தாராவின் ரீல் தங்கையிடம் டான்ஸ் கற்றுக்கொண்ட நடிகர் சிம்பு!
simbu learns dance : நடிகர் சிம்பு நயன்தாராவுக்கு தங்கையாக நடித்த நடிகையிடம், பரதநாட்டியம் கற்றுக்கொண்ட தகவல் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது.

டான்ஸ் கற்றுக் கொண்ட சிம்பு
simbu learns dance : மலையாளத்தில், இயக்குனர் ஃபாசில் இயக்கிய 'அனியாதி பிரவு' திரைப்படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன். பின்னர் இந்த திரைப்படம் தமிழில், தளபதி விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் 'காதலுக்கு மரியாதை ' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போதும், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
நடிகர் சிம்பு நடித்த படங்கள்
மலையாளம் மற்றும் தமிழில், சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், கடந்த 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் - சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் ஒரு கனவு' திரைப்படத்தில் ஸ்ரீகாந்தின் தங்கையாக குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக்கிய திரைப்படம் என்றால், அது தனுஷ் - நயன்தாரா நடிப்பில், இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன, 'யாரடி மோகினி' திரைப்படம் தான். இந்த படத்தில் சரண்யா, நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
சிம்பு நடித்த படங்கள்
இந்த படத்தை தவிர 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' 'வேலாயுதம்' , ஈரம் , ஆறுமுகம் , பழனி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அழகும் திறமையும் இருந்தும் கூட, இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்த நிலையில் தான் சரண்யா, சிம்புவுக்கு பரதநாட்டியம் சொல்லி கொடுத்த தகவலை, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ்
சரண்யா நடிகை என்பதை தாண்டி, ஒரு பாரத நாட்டிய கலைஞர் ஆவர். இந்த நிலையில் தான், நடிகர் சிம்பு "மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்ள கேரளா வந்தபோது, அவருடைய தலையில் லேசாக அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சரண்யாவின் கணவர் ஒரு மருத்துவர் என்பதால், இதுபற்றி அறிந்த சரண்யா சிம்புவை பார்க்க மருத்துவமனைக்கு சென்றாராம்.
பரதநாட்டியம் கற்றுக் கொண்ட சிம்பு
காயம் லேசாக இருந்ததால் அதில் இருந்து விரைவாகவே மீண்ட நடிகை சிம்பு, சரண்யாவிடம் கூறி இங்கு தனக்கு பாரத நாட்டியம் சொல்லி கொடுக்க ஆண் பரதநாட்டிய கலைஞர்கள் இருக்கிறார்களா என கேட்டுள்ளார். சரண்யா அதுபோல் இந்த இடத்தில் யாரும் இல்லை. உங்களுக்கு ஆசோதனை இல்லை என்றால் நானே சொல்லி தருகிறேன் என கூறி நடிகர் சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்று கொடுத்தாராம். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.