Director Atlee: மீண்டும் அப்பாவான அட்லீ! 'ராக்கா' செட்டில் டபுள் கொண்டாட்டம்!
இயக்குநர் அட்லீ இரண்டாவது முறையாகத் தந்தையாகியுள்ளார். அவரது மனைவி பிரியா அழகான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதனால் அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

இரண்டாவது முறையாக தந்தையான இயக்குநர் அட்லீ
இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா, திங்கட்கிழமை அன்று ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இவர்களுக்கு ஏற்கெனவே மீர் என்ற மகன் உள்ளார். இப்போது இரண்டாவது குழந்தை பிறந்ததால் அட்லீயின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. தற்போது அல்லு அர்ஜுனை வைத்து 'ராக்கா' என்ற படத்தை இயக்கி வரும் அட்லீக்கு, இது இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அட்லீ - பிரியா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மீர் இப்போது 'பெரிய அண்ணன்'
தனக்கு மகள் பிறந்த செய்தியை அட்லீ சமூக வலைதளத்தில் க்யூட்டாக அறிவித்தார். "ஆசிர்வதிக்கப்பட்டோம்... மீர்-க்கு தங்கை வந்துவிட்டாள்!" என்ற வாசகத்துடன், மகன் மீர் 'பெரிய அண்ணன்' ஆகிவிட்டதாக ஒரு போஸ்டரைப் பகிர்ந்தார். 2014-ல் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு, 2023-ல் மீர் பிறந்தான். இப்போது மகள் வந்ததால், குடும்பம் முழுமையடைந்துள்ளது. இந்த செய்தியைக் கேட்ட சமந்தா, காஜல் அகர்வால், அனன்யா பாண்டே போன்ற நட்சத்திரங்கள் அட்லீ தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
'ராக்கா' செட்டில் டபுள் கொண்டாட்டம்
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம் 'ராக்கா'. இந்த படக்குழுவில் இப்போது உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. காரணம், ஏப்ரல் 19 அன்று இப்படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோன், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். ஒரே நாள் இடைவெளியில், திங்களன்று இயக்குநர் அட்லீயும் தந்தையாகியுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் இயக்குநர், ஹீரோயின் இருவருமே நல்ல செய்தி சொன்னதால் 'ராக்கா' செட்டில் டபுள் கொண்டாட்டம்தான்.
ராக்கா ஷூட்டிங்கில் பிசியான அட்லீ
கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த பிறகும், தீபிகா படுகோன் படப்பிடிப்பில் இருந்து பின்வாங்கவில்லை. ஷெட்யூல் தாமதமாகக் கூடாது என்பதற்காக, ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். அவரது டெடிகேஷனைப் பார்த்து படக்குழுவே ஆச்சரியத்தில் உள்ளது. மறுபுறம், அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் வெளியான 'ராக்கா' ஃபர்ஸ்ட் லுக், சோஷியல் மீடியாவை அதிர வைத்தது. குறிப்பாக, அல்லு அர்ஜுனின் மொட்டைத் தலை லுக், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்ட படம் 2027-ல் திரைக்கு வரும். தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் இந்த ஆண்டு இயக்குநர் அட்லீக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது.
அட்லீ இயக்கும் ராக்கா திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படத்தில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் தீபிகா படுகோன் தவிர ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

