MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு... ஆடிப்போன தளபதி

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு... ஆடிப்போன தளபதி

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து வ்ழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 20 2026, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vijay Sangeetha Divorce
Image Credit : X

Vijay Sangeetha Divorce

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் வருகிற ஜூன் 15ந் தேதி வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து குடும்பநல நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சசிகலா முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

25
விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
Image Credit : x/actorvijay

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு

அப்போது சங்கீதா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தார்கள். அதேபோல் விஜய் தரப்பிலும் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய் தரப்பு தாங்கள் ஆஜராகிவிட்டதாக வழக்கறிஞர்கள் வக்காளத்து தாக்கல் செய்திருந்தனர். அப்போது இந்த வழக்கை எப்போது ஒத்திவைக்கலாம் என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது இருதரப்பினரும் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து ஜூன் மாதம் 15ந் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விஜய் தரப்பில் மேலும் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

Related Articles

Related image1
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!
Related image2
பிரசார மேடையில் மனைவி சங்கீதா குறித்து பேசிய விஜய்.. ரசிகர்களை அதிர வைத்த 'அந்த' ட்விஸ்ட்!
35
வழக்கு ஒத்திவைப்பு
Image Credit : x/actorvijay

வழக்கு ஒத்திவைப்பு

விஜய் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வருவதாக இருந்தால் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. பாதுகாப்பு பிரச்சனைகளும் உள்ளன. அதனால் வீடியோ கான்பரென்சிங் மூலம் ஆஜராக அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். இதுதவிர சங்கீதா, இந்த பிரச்சனை தொடர்பாக ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க கோரி மேலும் ஒரு மனுவையும் விஜய் தரப்பில் தாக்கல் செய்துள்ளார்களாம். இதுதொடர்பாக நீதிபதி எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை ஜூன் 15ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் விஜய்யும், சங்கீதாவும் ஆஜர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

45
விஜய் கூடுதல் மனு தாக்கல்
Image Credit : instagram

விஜய் கூடுதல் மனு தாக்கல்

வீடியோ கான்பரென்சிங் மூலம் ஆஜராக விஜய் அனுமதி கேட்டுள்ளதால், நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்றால் அவர் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவர்கள் இருவர் தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதுபற்றி இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. நீதிமன்றத்திலும் இதுகுறித்து பேசவில்லையாம். ஒருவேளை அவர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சங்கீதா 250 கோடி ஜீவனாம்சம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

55
பிரச்சாரத்தில் பிசியான விஜய்
Image Credit : Facebook/ Actor Vijay, X

பிரச்சாரத்தில் பிசியான விஜய்

விஜய்யும் சங்கீதாவும் கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். அந்த நடிகை யார் என்பதை அவர் வெளியிடவில்லை. தேர்தல் நேரத்தில் இந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னுடைய பிரச்சார பணிகளில் தீவிரமாக உள்ளார். இன்று சென்னையில் நேரடி வாக்கு சேகரிப்பில் இறங்கி உள்ளார் விஜய்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Songs: வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு, என்ன படம் தெரியுமா?
Recommended image2
‘தாய் தின்ற மண்ணே’ வைரமுத்துவின் பாடல் வரியில் ஒளிந்துள்ள சோழ வரலாறு பற்றி தெரியுமா? ஆயிரத்தில் ஒருவன் சீக்ரெட்
Recommended image3
Kara Trailer: வங்கிக் கொள்ளையனாக தனுஷ்! வளைகுடா போர் பின்னணியில் ஒரு த்ரில்லர்!
Related Stories
Recommended image1
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!
Recommended image2
பிரசார மேடையில் மனைவி சங்கீதா குறித்து பேசிய விஜய்.. ரசிகர்களை அதிர வைத்த 'அந்த' ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved