MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Songs: வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு, என்ன படம் தெரியுமா?

Songs: வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு, என்ன படம் தெரியுமா?

இசைஞானி இளையராஜாவின் சவாலை ஏற்று, 'வில்லுப்பாட்டுக்காரன்' படத்திற்காக உதடுகள் ஒட்டாத வார்த்தைகளைக் கொண்டு ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதினார். "தந்தேன் தந்தேன் இசை" எனத் தொடங்கும் அந்தப் பாடல் உருவான கதை தெரியுமா?

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 20 2026, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இரண்டு ஜாம்பாவான்கள் இணைந்து நிகழ்த்திய சாதனை
Image Credit : Asianet News

இரண்டு ஜாம்பாவான்கள் இணைந்து நிகழ்த்திய சாதனை

தமிழ் சினிமாவில் பல சவாலான முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் “உதடு ஒட்டாத வார்த்தைகள்” கொண்டு ஒரு முழு பாடலை உருவாக்குவது என்பது உண்மையிலேயே அசாதாரணம். அந்த சாதனையை நிகழ்த்தியவர் கவிஞர் வாலி. அவரின் படைப்பாற்றலும், இசைஞானி இளையராஜா இசையும் சேர்ந்தபோது, தமிழ் திரையுலகில் ஒரு தனித்துவமான இசை வரலாறு உருவானது.  

தமிழ் சினிமாவில் கவிஞர்கள் பலர் வந்தாலும், 'வாலி' ஒரு தனி ரகம். எண்பது வயதிலும் இளமை துள்ளும் பாடல்களை எழுதிய அந்த மேதை, வார்த்தைகளை வைத்து ஜால வித்தை செய்வதில் வல்லவர். அப்படிப்பட்ட ஒரு வித்தையைத் தான் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து அவர் நிகழ்த்திக் காட்டினார்.

25
இளையராஜா கொடுத்த 'ஷாக்' சவால்
Image Credit : our own

இளையராஜா கொடுத்த 'ஷாக்' சவால்

1992-ம் ஆண்டு, ராமராஜன் நடிப்பில் வெளியான 'வில்லுப்பாட்டுக்காரன்' படத்திற்காக இளையராஜா ஒரு மெட்டைப் போட்டிருந்தார். வழக்கமாக வாலி ஸ்டுடியோவுக்கு வந்ததும் பாடல் வரிகள் சரளமாக வந்து விழும். ஆனால் அன்றைய தினம் இளையராஜா ஒரு வினோதமான நிபந்தனையை விதித்தார்.

"வாலி சார், இந்தப் பாட்டுல வர்ற எந்த ஒரு வார்த்தையும் உச்சரிக்கும் போது மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டவே கூடாது" என்றார் ராஜா. இது சாதாரண விஷயமல்ல. தமிழில் 'ப', 'ம', 'வ' போன்ற எழுத்துக்கள் வரும்போதெல்லாம் உதடுகள் ஒட்டும். இவற்றைத் தவிர்த்து ஒரு முழுப் பாடலை எழுதுவது என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது.

Related Articles

Related image1
Music: வார்த்தைகளால் அழ வைத்த டி.ராஜேந்தர்! சூப்பர் டூப்பர் ஹிட்டான சோக ராகம் எது தெரியுமா?!
Related image2
Music: “பச்சமல பூவு” பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
35
பிறந்தது செம்மையான பாடல்
Image Credit : our own

பிறந்தது செம்மையான பாடல்

இந்தச் சவாலை ஏற்ற வாலி, அடுத்த சில மணி நேரங்களிலேயே வரிகளைச் செதுக்கினார். அந்தப் பாடல் தான்:

"தந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடி கால காலங்கள் தேடிய ஞானத்தில் தந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடியே..."

இந்தப் பாடலின் ஹைலைட்டே, இதைப் பாடிய மலேசியா வாசுதேவன் தான். பாடலின் ஒரு வரியைக் கூட அவர் உதடுகளை மூடிப் பாடவில்லை. நீங்கள் இந்தப் பாடலை இப்போது பாடிப் பார்த்தால் கூடத் தெரியும், உங்கள் வாய் திறந்தே தான் இருக்கும்; ஒருமுறை கூட உதடுகள் ஒன்றையொன்று தொடாது!

45
பிடிவாதம் பிடித்த கவிஞர்: 'கலைவாணரா? என்.எஸ்.கிருஷ்ணனா?'
Image Credit : Facebook

பிடிவாதம் பிடித்த கவிஞர்: 'கலைவாணரா? என்.எஸ்.கிருஷ்ணனா?'

பாடல் எழுதும் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. பாடலில் ஒரு இடத்தில் 'கலைவாணர்' என்ற சொல்லை வாலி பயன்படுத்தினார். அதில் 'வா' என்ற எழுத்து வரும்போது உதடு லேசாக ஒட்டும். இளையராஜா, "பரவாயில்லை சார், இது ரொம்ப மைனர் விஷயம் தான், அப்படியே இருக்கட்டும்" என்றார்.

ஆனால் வாலியோ, "இல்லை, ஒரு சொட்டில் விஷம் கலந்தாலும் அது விஷம் தான். விதிமுறை என்றால் அது நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும்" என்று கூறி, 'கலைவாணர்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அதற்குப் பதில் 'என்.எஸ்.கிருஷ்ணன்' என்று மாற்றினார். 'என்.எஸ்.கிருஷ்ணன்' என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது என்பது கவனிக்கத்தக்கது.

55
மொழியின் வலிமைக்கும் கவிஞர் வாலியின் திறமைக்கும் சான்று
Image Credit : Asianet News

மொழியின் வலிமைக்கும் கவிஞர் வாலியின் திறமைக்கும் சான்று

ஒரு மொழியில் உள்ள சொற்களை இவ்வளவு நுணுக்கமாகக் கையாண்டு, அதுவும் ஒரு சினிமா பாடலில் இத்தகைய பரிசோதனையைச் செய்தது இந்திய திரையுலகிலேயே இதுதான் முதல்முறை. வாலியின் சொல்லாற்றலும், இளையராஜாவின் இசை ஞானமும், மலேசியா வாசுதேவனின் அசாத்தியமான உச்சரிப்பும் இணைந்து இந்தப் பாடலை ஒரு வரலாற்றுச் சாதனையாக மாற்றியது.

இன்று வரை 'வில்லுப்பாட்டுக்காரன்' படத்தில் வரும் இந்தப் பாடல், தமிழ் மொழியின் வலிமைக்கும் கவிஞர் வாலியின் திறமைக்கும் ஒரு சான்றாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
இளையராஜா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘தாய் தின்ற மண்ணே’ வைரமுத்துவின் பாடல் வரியில் ஒளிந்துள்ள சோழ வரலாறு பற்றி தெரியுமா? ஆயிரத்தில் ஒருவன் சீக்ரெட்
Recommended image2
Kara Trailer: வங்கிக் கொள்ளையனாக தனுஷ்! வளைகுடா போர் பின்னணியில் ஒரு த்ரில்லர்!
Recommended image3
ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
Music: வார்த்தைகளால் அழ வைத்த டி.ராஜேந்தர்! சூப்பர் டூப்பர் ஹிட்டான சோக ராகம் எது தெரியுமா?!
Recommended image2
Music: “பச்சமல பூவு” பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved