MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Mr X Movie Day 1 Box Office : முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன மிஸ்டர் எக்ஸ்... LIK-வின் 8ம் நாள் வசூலை விட கம்மி..!

Mr X Movie Day 1 Box Office : முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன மிஸ்டர் எக்ஸ்... LIK-வின் 8ம் நாள் வசூலை விட கம்மி..!

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் எல்.ஐ.கே-வை விட கம்மியாக வசூலித்து உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 18 2026, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mr X Movie Day 1 Box Office
Image Credit : X

Mr X Movie Day 1 Box Office

தமிழ் சினிமாவில் அதிகம் கையாளப்படாத உளவு த்ரில்லர் வகையை மையமாகக் கொண்டு உருவான படமாக “மிஸ்டர் எக்ஸ்” தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறது. இப்படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், கெளதம் கார்த்திக் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகைகள் மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, அனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்து உள்ளார். இப்படம் பெரியளவில் ஆரவாரம் இல்லாமல் ஏப்ரல் 17ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

25
மிஸ்டர் எக்ஸ் கதை
Image Credit : X

மிஸ்டர் எக்ஸ் கதை

இயக்குநர் மனு ஆனந்த், வழக்கமான கதைகளிலிருந்து விலகி, சர்வதேச ஸ்பை ட்ராமாவின் உணர்வை தமிழில் கொண்டு வர முயற்சித்துள்ளார். 1960களின் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, இந்திய ரகசிய உளவுத்துறையில் பணியாற்றும் மர்ம ஏஜெண்ட் ஒருவரின் பணி சுற்றியே நகர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான அணு தொடர்பான ரகசியம் எதிரி கைகளில் போகும் அபாயம் உருவாக, அதை தடுக்கவும் மீட்டெடுக்கவும் அவர் மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சிகளே படத்தின் மையமாகிறது.

Related Articles

Related image1
Now Playing
உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை – ஆர்யா, மஞ்சு வாரியரின் மிஸ்டர் எக்ஸ் டீசர் வெளியீடு!
Related image2
ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படம் பட்டாசாய் இருந்ததா? புஸ்ஸுனு போனதா? விமர்சனம் இதோ
35
மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்
Image Credit : X

மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

நிஜ சம்பவங்களைத் தூண்டுதலாகக் கொண்டு கற்பனை சேர்க்கப்பட்டிருப்பது, கதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் திகில் உணர்வையும் தருகிறது. திரைக்கதை அமைப்பில் இயக்குநர் வேகத்தையும் தெளிவையும் பராமரிக்க முயன்றுள்ளார். இடையிடையே வரும் திருப்பங்கள், கதை எவ்வாறு நகரும் என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து வைத்திருக்கின்றன. அதே நேரத்தில், தேவையற்ற சண்டை காட்சிகள் அல்லது அதிகப்படியான வன்முறை இல்லாமல், சஸ்பென்ஸ் மூலமாகவே படத்தை இழுத்துச் செல்ல முயன்றிருக்கிறார்.

45
மிஸ்டர் எக்ஸ் வசூல்
Image Credit : X

மிஸ்டர் எக்ஸ் வசூல்

மொத்தத்தில், “மிஸ்டர் எக்ஸ்” ஒரு புதிய முயற்சியாக தமிழ் திரையுலகில் கவனம் பெறுகிறது. இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். இதன்காரணமாகவே இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை. இப்படம் முதல் நாளில் இந்தியாவில் வெறும் ரூ.65 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளம் தரவுகளை வெளியிட்டுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

55
லீடிங்கில் உள்ள எல்.ஐ.கே திரைப்படம்
Image Credit : Facebook

லீடிங்கில் உள்ள எல்.ஐ.கே திரைப்படம்

கடந்த வாரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ரிலீஸ் ஆன லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம், நேற்று மிஸ்டர் எக்ஸ் படத்தைவிட அதிகம் வசூலித்து உள்ளது. இப்படம் 8-ம் நாளான நேற்று ரூ.88 லட்சம் வசூலித்துள்ளது. இதுவரை எல்.ஐ.கே திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 34.92 கோடி வசூலித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களைக் காட்டிலும் இப்படம் வசூலில் மந்தமாகவே உள்ளது. இதுவரை பிரதீப் நடித்த படங்கள் அனைத்தும் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளன. அந்த லிஸ்ட்டில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இணையுமா என்பது புரியாத புதிராகவே உள்ளது. மிஸ்டர் எக்ஸ் படம் வெளியாகி உள்ளதால் இப்படத்திற்கான காட்சிகளும் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆர்யா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Music: “பச்சமல பூவு” பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
Recommended image2
மனோஜின் காதலுக்கு வேட்டு வைத்த ரோகிணி... ரேகாவுக்கு சிந்தாமணியால் வந்த புது சிக்கல் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
குணசேகரனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி... மதிவதினியின் பலே திட்டம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Related Stories
Recommended image1
Now Playing
உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை – ஆர்யா, மஞ்சு வாரியரின் மிஸ்டர் எக்ஸ் டீசர் வெளியீடு!
Recommended image2
ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படம் பட்டாசாய் இருந்ததா? புஸ்ஸுனு போனதா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved