MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் வெயிட்டிங் லிஸ்ட்.. GNWL vs PQWL vs RLWL.. எதில் சீட் சீக்கிரம் கன்பார்ம் ஆகும்? முழு விவரம்!

ரயில் வெயிட்டிங் லிஸ்ட்.. GNWL vs PQWL vs RLWL.. எதில் சீட் சீக்கிரம் கன்பார்ம் ஆகும்? முழு விவரம்!

ரயில் டிக்கெட்டில் GNWL, PQWL , RLWL வெயிட்டிங் லிஸ்ட் என்றால் என்ன? மூன்றில் அது அதிகம் கன்பார்ம் ஆகும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 23 2026, 09:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் வகைகள்
Image Credit : Getty

ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் வகைகள்

இந்தியாவில் ரயிலில் பயணிக்க யார் தான் ஆசைப்பட மாட்டார்கள். நமது நாட்டின் போக்குவரத்தில் முதுகெலும்பாக இருக்கும் ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சாதாரண பயணிகள் ரயில் முதல் வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் டிமாண்ட் உயர்ந்து வருவதால் கன்பார்ம் டிக்கெட் பெறுவது குதிரை கொம்பாக உள்ளது.

இதனால் சில மாதங்களுக்கு முன்பு வெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் கன்பார்ம் ஆகும் கருதி பலரும் டிக்கெட் புக் செய்து விடுகின்றனர். நீங்கள் ரயில் டிக்கெட் புக் செய்துபோது வெயிட்டிங் லிஸ்ட் வந்தாலும் அது GNWL,

PQWL , RLWL என 3 விதங்களில் இருக்கும். இந்த மூன்றுக்கும் என்ன வித்தியாசம்? அதில் டிக்கெட் ஈஸியாக கன்பார்ம் ஆகும் என்பது குறித்து பார்க்கலாம்.

23
ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட்
Image Credit : Getty

ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட்

GNWL என்றால் ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் (General Waiting List). ரயில் கிளம்பும் நிலையத்தில் இருந்து நீங்கள் டிக்கெட் புக் செய்தால் இந்த கோட் வரும். இதில் சீட் கன்ஃபார்ம் ஆக வாய்ப்பு ரொம்ப அதிகம். ஏன் என்றால் ரயில் புறப்படும் இடத்துலதான் அதிக சீட் கோட்டா இருக்கும். உங்கள் வெயிட்டிங் லிஸ்ட் 10 அல்லது 15 என்று இருந்தால் உடனே பயப்படாதீங்க, 90% கன்ஃபார்ம் ஆகிடும்.

PQWL

PQWL (Pooled Quota Waiting List) கோட், நீங்க நடுவில் இருக்குற நிலையங்களில் இருந்து பயணம் செய்யும்போது வரும். அதாவது, ரயில் கிளம்புற இடத்துலயும் இல்லாமல், சேரும் இடத்துலயும் இல்லாமல் நடுவில் உள்ள ஸ்டேஷனில் ஏறி இறங்குறவங்களுக்கு இது. இந்த கோட்டா ரொம்ப கம்மி. ஆகையால் இதில் கன்ஃபார்ம் ஆக ரொம்ப லேட் ஆகும்.

Related Articles

Related image1
Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!
Related image2
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் பெர்த் ஈஸியாக கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
33
RLWL
Image Credit : social media

RLWL

RLWL-னா ரிமோட் லொகேஷன் வெயிட்டிங் லிஸ்ட் (Remote Location Waiting List). இது, ரயில் போகும் வழியில் இருக்குற சில முக்கியமான ஸ்டேஷன்களுக்கு மட்டும் இருக்கும். இந்த ஸ்டேஷன்களுக்கு ஒரு குறிப்பிட்ட, கோட்டாதான் இருக்கும். ஆகையால் இதில் சீட் கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம். 

உதாரணத்துக்கு, நீங்கள் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு டிக்கெட் புக் பண்றீங்க. சிஸ்டம் உங்களுக்கு 'வெயிட்டிங் 10' என்று காட்டுகிறது. உடனே நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். உங்களுக்கு முன்னாடி 10 பேர் டிக்கெட்டை கேன்சல் செஞ்சிருந்தாலும், ரயில்வே சிஸ்டம் உங்களுக்கு 'வெயிட்டிங் 10'னுதான் காட்டும். ஆனால் அந்த சீட் ஏற்கெனவே காலி ஆகிடுச்சு. சார்ட் ரெடி ஆகும்போது உங்கள் டிக்கெட் 100% கன்ஃபார்ம் ஆகிடும்.

இந்த மூன்றில் எது பெஸ்ட்?

ஒட்டுமொத்தத்தில் எப்பவும் GNWL கோட்ட இருந்தால் மட்டுமே டிக்கெட் புக் பண்ண முயற்சி பண்ணுங்க. இதில் ரயில் கிளம்பும் ஸ்டேஷன்னில் இருந்து டிக்கெட் புக் செய்து விட்டு'போர்டிங் பாயின்ட்' மாத்திக்கலாம். இதுக்கு கொஞ்சம் பணம் அதிகமாகலாம், ஆனா கன்ஃபார்ம் சீட் கிடைக்கிற உத்தரவாதம் அதிகமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி பயணச்சீட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Post Office Schemes: பேங்க்கை விட 2% அதிக வட்டி தரும் 5 போஸ்ட் ஆபீஸ் பிளான்கள்.. முழு லிஸ்ட்!
Recommended image2
Gold Price: தங்கத்தை கண்ணுல பார்க்கவே முடியாதா? ரூ.4 லட்சம் வரை விலை உயருமா? பாபா வாங்காவின் பகீர் கணிப்பு.!
Recommended image3
Concrete Planters: ரூ.80-க்கு செஞ்சு ரூ.800-க்கு விற்கலாம்! செம டிமாண்ட் உள்ள சூப்பர் பிசினஸ் ஐடியா!
Related Stories
Recommended image1
Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் பெர்த் ஈஸியாக கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved