MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Concrete Planters: ரூ.80-க்கு செஞ்சு ரூ.800-க்கு விற்கலாம்! செம டிமாண்ட் உள்ள சூப்பர் பிசினஸ் ஐடியா!

Concrete Planters: ரூ.80-க்கு செஞ்சு ரூ.800-க்கு விற்கலாம்! செம டிமாண்ட் உள்ள சூப்பர் பிசினஸ் ஐடியா!

Business Ideas: Making Concrete Planters: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கான்கிரீட் பிளான்டர்ஸ் தொழில் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 23 2026, 06:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரூ.5,000 முதலீட்டில் தொழில் தொடங்கலாம்
Image Credit : Chat GPT

ரூ.5,000 முதலீட்டில் தொழில் தொடங்கலாம்

இன்றைய காலக்கட்டத்தில் எந்த வேலையும் நிரந்தரம் இல்லை என்பதால் பலரும் சொந்தமாக தொழில் செய்ய ஆசைப்படுகிறார்கள். குறைந்த முதலீட்டில், அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழிலைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் உங்கள் வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய ஒரு அட்டகாசமான பிசினஸ் ஐடியா குறித்து பார்ப்போம்.

இப்போதெல்லாம் எல்லாரும் தங்கள் வீடு, தோட்டத்தை ஸ்டைலாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நீங்களும் அழகான சிமென்ட் தொட்டிகளை (கான்கிரீட் பிளான்டர்ஸ்) பார்த்திருப்பீர்கள். வெறும் ₹5000 முதலீட்டில் உங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது பால்கனியில் இருந்தே இந்த பிசினஸை தொடங்கலாம்.

26
கான்கிரீட் பிளான்டர்‌
Image Credit : Pinterest

கான்கிரீட் பிளான்டர்‌

பழைய மண் தொட்டிகளுக்குப் பதிலாக, இப்போது பலரும் மாடர்ன் மற்றும் மினிமலிஸ்ட் டிசைனில் வரும் கான்கிரீட் தொட்டிகளை விரும்புகிறார்கள். இவை விலை மலிவு, அதே சமயம் உறுதியானவை. விரும்பிய வடிவம், நிறம் கொடுக்கலாம். சிமென்ட், மணல் போன்ற மூலப்பொருட்கள் எல்லா நகரங்களிலும் எளிதாகக் கிடைக்கும்.

இந்தத் தொழிலுக்கு வெள்ளை அல்லது கிரே சிமென்ட், மணல், சில பிளாஸ்டிக் அச்சுகள் தேவை. தொடக்கத்தில், வீட்டில் இருக்கும் பழைய டப்பாக்கள் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் சிலிகான் மோல்டுகளைப் பயன்படுத்தலாம். ₹5000 முதலீட்டில், குறைந்தபட்சம் 20-30 விதமான டிசைன்களில் அச்சுகளையும், சிமென்ட்டையும் வாங்கிவிட முடியும்.

Related Articles

Related image1
Business Ideas: மாசம் ரூ.1லட்சம் சம்பாதிக்கலாம்! வெறும் ரூ.50,000 முதலீட்டில் இந்த 5 தொழில்களை தொடங்குங்க!
Related image2
Business Ideas: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? ரூ.1 லட்சம் முதலீடு போதும்.. டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள் இதோ!
36
வாடிக்கையாளர்கள் விரும்பும் பிரீமியம் லுக்
Image Credit : AI

வாடிக்கையாளர்கள் விரும்பும் பிரீமியம் லுக்

சிமென்ட் காய்ந்த பிறகு, சாண்ட்பேப்பர் கொண்டு தேய்த்து மென்மையாக்க வேண்டும். பிறகு, டிரெண்டில் இருக்கும் பேஸ்டல் நிறங்கள் அல்லது மெட்டாலிக் கோல்டு பெயின்ட் அடிக்கலாம். இதுதான் வாடிக்கையாளர்கள் விரும்பும் 'பிரீமியம் லுக்கை' கொடுக்கும்.

பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங்

உங்கள் பிராண்டுக்கு ஒரு நல்ல பெயர் வைத்து, இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கி, அழகான புகைப்படங்களைப் பதிவிடுங்கள்.

46
ரூ.50க்கு உருவாக்கி ரூ.150க்கு விற்கலாம்
Image Credit : Gemini AI

ரூ.50க்கு உருவாக்கி ரூ.150க்கு விற்கலாம்

ஆபீஸ் டேபிள், ஜன்னல் ஓரம் வைக்கும் சிறிய டெஸ்க் பிளான்டர்களில் லாபம் அதிகம். ஒரு சிறிய தொட்டியை உருவாக்க ₹30 முதல் ₹50 வரைதான் செலவாகும். ஆனால், நல்ல ஃபினிஷிங்குடன் இதை ₹150 முதல் ₹250 வரை விற்கலாம். 

தோட்டம் மற்றும் பால்கனிக்கான பெரிய தொட்டிகளைத் தயாரிக்க ₹100 முதல் ₹150 வரை செலவாகும். சந்தையில் இதன் விலை ₹500 முதல் ₹800 வரை இருக்கும். நர்சரி அல்லது பெரிய புராஜெக்ட்களுக்கு மொத்தமாக சப்ளை செய்தால், ஒரு ஆர்டரில் ₹350 முதல் ₹650 வரை லாபம் பார்க்கலாம்.

56
மாதம் ரூ.30,000 நிகர லாபம்
Image Credit : Pinterest

மாதம் ரூ.30,000 நிகர லாபம்

நீங்கள் பெரிய அளவில் மெனக்கெடாமல், ஒரு நாளைக்கு வெறும் 5 தொட்டிகளை விற்றாலே போதும். இந்த சராசரியின்படி, மாத இறுதியில் உங்கள் செலவுகள் போக ₹15,000 முதல் ₹30,000 வரை நிகர லாபம் பார்க்கலாம். உங்கள் பிராண்ட் வளர்ந்து, ஆன்லைன் மார்க்கெட்டில் விற்கத் தொடங்கினால், இந்த வருமானம் இன்னும் அதிகரிக்கும்.

66
எங்கெங்கு விற்பது?
Image Credit : Pinterest

எங்கெங்கு விற்பது?

உள்ளூர் நர்சரிகள்: உங்கள் ஊரில் உள்ள நர்சரிகளிடம் பேசலாம். அவர்கள் மொத்தமாக வாங்கத் தயாராக இருப்பார்கள்.

ஆன்லைன் சந்தை: Amazon, Flipkart மற்றும் Etsy போன்ற தளங்களில் இந்த வகை தொட்டிகளுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

கார்ப்பரேட் கிஃப்டிங்: அலுவலக அலங்காரத்திற்காக நிறுவனங்கள் மொத்தமாக ஆர்டர் செய்வார்கள். அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு தொழிலிலும் ரிஸ்க் உண்டு. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள லாபம் உங்கள் நகரம், சந்தை மற்றும் உழைப்பைப் பொறுத்து மாறுபடும். முதலீடு செய்வதற்கு முன், நீங்களாகவே சந்தை ஆராய்ச்சி செய்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrol Price Hike: ஷாக்கிங் நியூஸ்! ஒரே நாளில் ரூ.28 உயரும் பெட்ரோல் விலை..? அதிர்ச்சியில் மக்கள்
Recommended image2
மக்களே உஷார்... கரண்ட் பில் கிடுகிடுவென உயரப்போகுதாம்; அதிர்ச்சி அளிக்கும் புது ரிப்போர்ட்
Recommended image3
Investment Idea : 15 வருடத்தில் ரூ.40 லட்சம்.! மாசம் எவ்வளவு சேமிக்கணும் தெரியுமா? மத்திய அரசோட சூப்பர் முதலீடு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க.!
Related Stories
Recommended image1
Business Ideas: மாசம் ரூ.1லட்சம் சம்பாதிக்கலாம்! வெறும் ரூ.50,000 முதலீட்டில் இந்த 5 தொழில்களை தொடங்குங்க!
Recommended image2
Business Ideas: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? ரூ.1 லட்சம் முதலீடு போதும்.. டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved