- Home
- Business
- ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் பெர்த் ஈஸியாக கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் பெர்த் ஈஸியாக கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
ரயிலில் கடைசி நேரத்தில் அதாவது சார்ட் போட்ட பிறகும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் இந்திய ரயில்வே சூப்பர் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அது என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பு
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர் . தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். இதனால் முக்கிய ரயில்களுக்கு டிமாண்ட் அதிகரித்து டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. சிலர் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்பவர்கள் 1 மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இனி சார்ட் போட்ட பிறகும் டிக்கெட் புக் செய்யலாம்
ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் செய்தாலும் கன்பார்ம் டிக்கெட் கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் புக் செய்தே கன்பார்ம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. இதிலும் மிக முக்கியமாக அவசரமாக பயணம் மேற்கொள்பவர்கள் கடைசி நேரத்தில் கன்பார்ம் டிக்கெட் பெறுவது கடினமாக இருந்து வந்தது. இந்த நிலையில், கடைசி நேரத்தில் அதாவது சார்ட் போட்ட பிறகும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் இந்தியன் ரயில்வே சூப்பர் அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
புக்கிங் ஆஃப்டர் சார்ட் பிரிபரேஷன்
முன்பெல்லாம் ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு முதல் சார்ட் போடப்பட்டு வந்தது. இப்போது ரயில் கிளம்பும் 8 மணி நேரத்துக்கு முன்பு சார்ட் போடப்பட்டு வருகிறது. இரண்டாம் மற்றும் கடைசி சார்ட் ரயில் கிளம்பும் அரை மணி நேரத்துக்கு முன்பாக போடப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் காலியிடங்களை எளிதாகக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். இதற்கு 'புக்கிங் ஆஃப்டர் சார்ட் பிரிபரேஷன்' என்று பெயர்.
சார்டிங் வேகன்சி
உதாரணத்துக்கு நீங்கள் நெல்லையில் இருந்து சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடைசி நேரத்தில் செல்ல விரும்புகிறீர்கள். அப்போது அந்த ரயிலில் சீட்கள் காலியாக இருந்தால் கரன்ட் அவெலபிள் (Current Available) மூலம் நீங்கள் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். இதற்காக ரயில்வே வாரியம் தனது இணையதளம் மற்றும் செயலியில் சார்டிங் வேகன்சி (Charting Vacancy) என்ற வசதியை வழங்குகிறது. இதன் மூலம் எந்தெந்த பெட்டிகளில் (Coaches), எந்தெந்த இருக்கைகள் காலியாக உள்ளன? என்பதை நீங்களே நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதில் எப்படி டிக்கெட் புக் செய்வது?
நீங்கள் கடைசி நேரத்தில் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டால் கீழே உள்ள வழிகளை பின்பற்றி டிக்கெட் கன்பார்ம் செய்யலாம்.
* IRCTC இணையதளம் irctc.co.in அல்லது செயலில் சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள 'Charts / Vacancy' என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
* நீங்கள் பயணம் செய்ய விரும்பும் ரயிலின் பெயர் அல்லது எண், தேதியை உள்ளிட்டு 'Get Train Chart' என்பதைக் கிளிக் செய்யவும்.
* இப்போது அந்த ரயிலில் ஸ்லீப்பர், ஏசி என எந்தெந்த வகுப்புகளில் எத்தனை பெர்த்கள் காலியாக உள்ளன என்ற பட்டியல் தோன்றும்.
* அப்படி காலியிடங்கள் இருந்தால், அங்கேயே உள்ள 'Book' பொத்தானைப் பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். அல்லது நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டர்களிலும் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதன் நன்மைகள் என்னென்ன?
இதில் நன்மை என்னவென்றால் சார்ட் தயாரித்த பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தட்கல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சாதாரண முன்பதிவு கட்டணமே செலுத்தினால் போதும். ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இருந்து அடுத்த நிலையத்திற்கு இடையில் சீட் காலியாக இருந்தாலும் நீங்கள் புக் செய்ய முடியும். 2வது சார்ட் போடப்படும் ரயில் புறப்படும் அரை மணி நேரம் முன்பு வரை இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும். ஆனால் அதிக டிமாண்ட் கொண்ட ரயில்களில் கரன்ட் அவெலபிள் (Current Available) இருப்பது கொஞ்சம் கடினம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

