MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அனைத்து வகை உடல் பரிசோதனை.! உடனே ரிசல்ட்- முதலமைச்சரின் குஷியான அறிவிப்பு

ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அனைத்து வகை உடல் பரிசோதனை.! உடனே ரிசல்ட்- முதலமைச்சரின் குஷியான அறிவிப்பு

தமிழக அரசு 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தின் கீழ் இலவச முழு உடல் பரிசோதனை முகாம்களை நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 2 முதல் மாநிலம் முழுவதும் 1,256 முகாம்கள் மூலம் இந்த சேவை வழங்கப்படும். 

3 Min read
Author : Ajmal Khan
| Updated : Jul 31 2025, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
“நலம் காக்கும் ஸ்டாலின்”
Image Credit : tndipr

“நலம் காக்கும் ஸ்டாலின்”

தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் மக்களுக்கு நேரடியாக 46 சேவைகள் மீதான பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக உடல் நலன் சார்ந்ததும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை தொடங்கவுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எதிர்வரும் ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன். 

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

26
முழு உடல் பரிசோதனை திட்டம்
Image Credit : mk stalin

முழு உடல் பரிசோதனை திட்டம்

இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம்வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், 

இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

Related Articles

Related image1
Weight Loss Drinks : உடல் எடையை ஹெல்தியா குறைக்கணுமா? அப்ப இந்த ட்ரிங்க்ஸ்ல ஒன்னு குடிங்க
Related image2
ஆகஸ்டில் தமிழகத்திற்கு காத்திருக்கும் ஆபத்து.! வெதர்மேன் அலர்ட் ரிப்போர்ட்
36
இரத்த மாதிரிகள் பரிசோதனை- உடனே முடிவுகள்
Image Credit : stockPhoto

இரத்த மாதிரிகள் பரிசோதனை- உடனே முடிவுகள்

உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி / கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 

இம்முகாம்களில் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.

46
கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் பரிசோதனை
Image Credit : stockPhoto

கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் பரிசோதனை

அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே (X-Ray), எக்கோகார்டியோகிராம்(Echocardiogram), அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (USG) மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.

56
முகாமில் மருத்துவ ஆலோசனைகள்
Image Credit : Getty

முகாமில் மருத்துவ ஆலோசனைகள்

இம்முகாமில் பங்குகொள்ளும் பயனாளர்களுக்குக் கீழ்க்கண்ட மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.

  • பொது மருத்துவம்,
  • பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,
  • இருதய மருத்துவம்,
  • எலும்பியல் மருத்துவம்,
  • நரம்பியல் மருத்துவம்,
  • தோல் மருத்துவம்,
  • காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்,
  • மகப்பேறு மருத்துவம்,
  • இயன்முறை மருத்துவம்,
  • பல் மருத்துவம்,
  • கண் மருத்துவம்,
  •  மனநல மருத்துவம்
  • குழந்தைகள் நல மருத்துவம்
  •  நுரையீரல் மருத்துவம்
  • நீரிழிவு நோய் மருத்துவம்
  • கதிரியக்கவியல் மருத்துவம்
66
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் பதிவு செய்தல்
Image Credit : our own

முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் பதிவு செய்தல்

மேற்சொன்ன பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களின் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள், நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை (HMIS 3.0) வாயிலாகக் கண்காணிக்கப்பட உள்ளன.

இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று (ம) மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறுசிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை(HMIS 3.0) மூலம் கண்காணிக்கப்படும் இம்முழு உடல்பரிசோதனை முகாமானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக உயர்தரமான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க இருக்கின்றன.

இந்த முகாமை அனைத்து பொதுமக்களும், குறிப்பாக “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் நடத்தப்படும் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
சுகாதார நன்மைகள்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
Weight Loss Drinks : உடல் எடையை ஹெல்தியா குறைக்கணுமா? அப்ப இந்த ட்ரிங்க்ஸ்ல ஒன்னு குடிங்க
Recommended image2
ஆகஸ்டில் தமிழகத்திற்கு காத்திருக்கும் ஆபத்து.! வெதர்மேன் அலர்ட் ரிப்போர்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved